வியாழன், 23 ஜனவரி, 2020

இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24.


        இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!     

        பெண் குழந்தையைப்பாதுகாப்போம்: பெண்மையைப்  போற்றுவோம் ...!

பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகியதேவதைகள் வாழும் வீடு..

பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக ஜனவரி 24 ஆம் தேதி (இன்று)  தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.                                               

''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம்செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை  கூறியுள்ளார்.பெண்களை போற்றுவதற்குகிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும்,புலவர்களும்,  நன்குபயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில்நதிகள் அனைத்திற்கும் பெண்களின்பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமைசேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியைபூமாதேவி என்றும், நிலவை பெண்ணாகஉருவகப்படுத்துவதும் காலம் காலமாகநடந்து வருகிறது.

தொல்காப்பியம், போன்ற இலக்கண நூல்கள், சங்கஇலக்கியங்கள்,நீதிநூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில்பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக்கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண்,பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழைமகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், திருந்திழாய், நெட்டிருங்கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர்மேனியர், சுடர்நுதல்குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல்மகளிர், சில் வளைவிறலி, மனைமாண்இனியோள், பொற்றொடி மகளிர், தென்தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர்,நறுநுதலாள், இல்லாள்,கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண்,இனியார் தோள் போன்ற சிறப்பானசொற்களை பாடல்வரிகளில்கையாண்டுள்ளனர் .

வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும்முக்கியம் என்பதை அறிந்து , அன்றேசங்ககாலப்  புலவர்கள் பெண்களின்பெருமையயும், முக்கியத்துவத்தையும்பாடல்களாக  அமைத்தனர். இப்பாடல்கள்2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண்பெருமை பேசிக்கொண்டு உயிருடன்உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம். இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும்மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள்இருந்துள்ளனர் .

வரலாற்றில்  போற்றத்தகுந்தவகையில் ஔவையார்,காக்கைப்பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார்,ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள்,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மை, அன்னைதெரசா,இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்தசாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .

பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்ததமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள்முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும்தொண்டுகள் அளவிடமுடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக.1869-ல் பெண்களுக்கெனத்தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்தமுறையில்தொடங்கி நடத்தினார்.

வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்' என்னும்நுால்களிலும் பெண்களின்முன்னேற்றத்திற்கான பலஅரியசிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில்பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டசான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்குமுதல் இடம் உண்டு.

பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒருபிரிக்கமுடியாத அங்கம். அவள்இல்லையேல் வீடும், நாடும் இயங்கமுடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்டகாலங்களிலும், சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் போன்றவற்றைபல்வேறு  நூல்களின்  வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின்வளர்ச்சி காலத்தில், தனது  திறமையை யும், ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில்பெண்கள் சிறந்த நிலையைஅடைந்துள்ளனர்  என்பதுவெளிப்படையான உண்மை . பெண்குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும்அவரவர் மதம், இனத்திற்கு ஏற்பஒவ்வொருவகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும்பக்குவம் நமக்கு உண்டு.

பழமைவாதம், மூடநம்பிக்கைகளை ஒருகாலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக்கொண்டு பயணிக்காமல் எந்த திசையைநோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள்தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின்உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்தவேண்டும் .

இன்று பல சிறுமிகள்காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம்பெற்றோர்கள்தான். சில பெற்றோர்கள்சுதந்திரமாக வளர வேண்டும் என்றுகுழந்தைகளின் நடத்தைகளை கண்டுகொள்ளமாட்டார்கள். இன்னும் சிலபெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள். இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம்சில நெறிமுறைகளோடும், நட்போடும்  பழகவேண்டும்.

 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதைகாதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப்பேச வேண்டும். அவர்களின் நட்பைஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும்அவர்களின் மனம்  நோகாதவாறு புரியவைக்க வேண்டும்.உங்கள் பெண்குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத்தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன்பகிர்ந்துகொள்வார்கள்.

 பெண் குழந்தையின்  உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்துஅவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக்கற்றுத் தரவேண்டும். குழந்தைக்கு விபரம்தெரிந்ததுமே, அவர்களுக்கு ‘’குட் டச், பேட்டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பதுகாலத்தின்அவசியமாகும். உங்களைச்சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின்குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தைசிதைக்காமல் இருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருபெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்தகுறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்துவாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு பெரிய வாழ்த்தாக அமையும்!.

இந்தியாவில் பெண் குழந்தைகளைவழிநடத்தும் விதம் காலம் காலமாகஅன்புடனும், அரவணைப்புடனும்தொடர்கிறது. பெரியோரை மதிப்பது, சமூகசிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்தகல்வி மூலம் கற்று கொடுக்கவேண்டும்.அவர்களை சரியான பாதையில்கால் பதிக் வைத்து, அவர்களுடன் கைகோர்த்து,அவர்கள் செல்லும் பாதையைசெம்மைப்படுத்தி, வழித்தடங்களில்இருக்கும் கரடு முரடுகளையும், முட்புதர்களையும்,அகற்றி விட்டாலேபோதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி,பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த விதகேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்ததிறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து. எந்தஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களைசமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூகசிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்குவழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்தபாதுகாப்பு என்பதை பெண்களுக்குஉணர்த்த வேண்டும்.

ஆறுதலாக இளைப்பாறும் மடிஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்தநண்பராகவோ... இருக்க வேண்டும் .எனசொல்லி கொடுக்க வேண்டும். பெண்களைவெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண்குழந்தைகளை காட்டாமல்,தோல்விகண்டாலும், துவண்டு போகாமல், அதைஎதிர்த்துப்  போரிடும்குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக்கொண்டு ஒருகுடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால்மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம்அனைவரும் உணரவேண்டும்.

பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள்அல்ல... அறிவுச்சுடர்கள்.

இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!

 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்:பெண்மையை போற்றுவோம் ...!

த.புவனேஸ்வரிமகேந்திரன், எம்.ஏ.எம்.எட்.
மதி கல்வியகம்,திருநெல்வேலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக