புதன், 25 ஏப்ரல், 2018

இனி ரேஷன் கடைகளில் தினை, ராகி, கம்பு, சோளம்...

இனி ரேஷன் கடைகளில் தினை, ராகி, கம்பு, சோளம்...

இனி ரேஷன் கடைகளில் தினை, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை மானிய விலையில் விற்க வேண்டும் என்று மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 686 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலம் 2 கோடியே 3 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 கிலோ புழுங்கல் அரிசி, 10 கிலோ பச்சரிசி இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், பருப்பு வகைகள் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தில் கோதுமையை வழங்க வேண்டும் என்று தெரிவித்து, மத்திய அரசு கோதுமை ஒதுக்கீடு செய்வதால் அதை மாநில அரசும் வழங்குவதாகத் கூறப்பட்டது. இந்நிலையில், 'உடலுக்கு ஆரோக்கியம் தரும் ராகி, சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளது. நஞ்சில்லா சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரிக்கும்போது அதன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கும். இதன்மூலம் அந்தத் தானியங்களின் விலையும் படிப்படியாகக் குறையும் என்று பல்வேறு யோசனைகளை சிறுதானிய உற்பத்தியாளர்கள், மத்திய-மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். சந்தையில் கிலோவுக்கு வரகு அரிசி ரூ.60, தினை அரிசி ரூ.40, குதிரைவாலி அரிசி ரூ.60, சாமை ரூ. 70, பனி வரகு ரூ.60, கம்பு ரூ.35, கேழ்வரகு ரூ.35, நாட்டுக்கம்பு ரூ.40 என்ற விலைகளில் கிடைக்கிறது. இவற்றை மொத்தவிலையில் கொள்முதல் செய்துதான் நியாயவிலைக் கடைகளில் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானியத்துக்கும் மத்திய அரசு எவ்வளவு மானியம் தருகிறது என்பதைப் பொறுத்தே மாநில அரசின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். இப்போது, தமிழகச் சட்டசபையில் விரைவில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்போது, இதுபற்றி முதல்வர் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்து, அதுபற்றிய அறிவிப்பை வெளியிடும்'' என்றனர். Thanks TIME PASS NEWS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக