ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

உலக புத்தக நாள்- ஏப்ரல் 23: உலகத்தைக் காட்டும் நூலகங்கள்



உலக புத்தக நாள்-  ஏப்ரல் 23: உலகத்தைக் காட்டும் நூலகங்கள்

ஒரு நூலகம் எப்படி இருக்கும்?

 
புத்தகங்கள், அவற்றை வைக்க அலமாரிகள், வார, மாத இதழ்கள், நாளிதழ்கள், உட்கார்ந்து படிக்க மேசைகள் - நாற்காலிகள், சில கணினிகள், நூலகர், உதவியாளர்கள்… அப்புறம் நிறைய அமைதி!

இவை மட்டும்தான் ஒரு நூலகத்தில் இருக்க வேண்டுமா என்ன?

மாற்றி யோசிப்போமே என்று உலகில் சில நூலகங்களின் அமைப்பையே ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் வடிவமைத்துள்ளார்கள்.

அதுவும் சிறுவர்களுக்கான நூலகங்கள். அவை எங்கே இருக்கின்றன? எப்படி இருக்கின்றன?

இங்கே நீங்கள் உற்சாகமாகச் சத்தம் எழுப்பியபடியே வரலாம். ‘சைலன்ஸ் ப்ளீஸ்’ தேவையில்லை!

செர்ரிடோஸ் மில்லினியம் நூலகம்

கலிஃபோர்னியாவின் செர்ரிடோஸ் நகரத்தில் அமைந்த பழைய நூலகம்.

ஆனால், 2002-ல் முழுக்க முழுக்க உள் அலங்காரம் எல்லாம் மாற்றப்பட்டு, நவீனப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது.

ஒரு நூலகம் எப்படி எல்லாம் இருக்குமோ, அந்த அமைப்பை எல்லாம் மாற்றி, முற்றிலும் புதுமையாகக் கட்டப்பட்ட நூலகம் இது.

அதுவும் குழந்தைகளுக்கான பிரிவில் நுழையும் போதே பிரம்மாண்ட புத்தகங்கள் வழியே நுழையும்படியான வாசல் வரவேற்கும்.

உள்ளே பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள். மாபெரும் மரம் ஒன்றின் கீழ் கால் நீட்டி அமர்ந்து படிக்கலாம்.

அல்லது லைட் ஹவுஸ் ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்து வாசிக்கலாம்.

நம் அருகிலேயே டைனோசரின் எலும்புக்கூடு ஒன்று சமர்த்தாக நின்றுகொண்டிருக்கும்.

இன்னொரு பக்கம், மிகப் பெரிய கண்ணாடித் தொட்டிக்குள் சுறாக்கள் செல்லப் புன்னகையுடன் நீந்திக்கொண்டிருக்கும்.

இங்கே விண்கலம் உண்டு. சிறு தியேட்டர் உண்டு. ஓவியக்கூடம், கலைக்கூடம், கம்ப்யூட்டர் ஒர்க்-ஸ்டேஷன்ஸ் என இன்னும் பல உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக