வியாழன், 19 ஏப்ரல், 2018

முகத்தில் தாடி அடர்த்தியாக சீராக வளர உதவும் வீட்டு பொருட்கள்.

முகத்தில் தாடி அடர்த்தியாக சீராக வளர உதவும் வீட்டு பொருட்கள்.


இன்றைய நவீன உலகத்தில் உள்ள இளைஞர்கள் தாடி தங்களை கவர்சியாகவும் அழகாகவும் காட்டுகிறது என நம்புகின்றனர். ஆனால் பெரும்பான்மையான ஆண்களுக்கு தாடி விரைவாகவும் அடர்த்தியாகவும் வளர்வதில்லை. எனவே முகத்தில் தாடியை அடர்த்தியாகவும் அனைத்து இடத்திலும் சீராக வளர கீழே டிப்ஸ் தரப்பட்டுள்ளது.

பட்டை மற்றும் எலுமிச்சை சாறு :
பட்டையை பொடி செய்து 1 டீஸ்பூன் எடுத்து அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் மாற்ற வேண்டும். பின் அதை தாடி உள்ள பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்னெய் :
தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை 10:1 என்ற விகிதத்தில் பேஸ்டாக மாற்ற வேண்டும். இந்த பேஸ்டை ஒரு பருத்தி பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். பின் 15 நிமிடம் காய்ந்த பின் இதனை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை தினமும் 3 முறை செய்ய வேண்டும்.

கடுகு இலை :
1/4 டீஸ்பூன் நெல்லி சாறுடன் 3 டீஸ்பூன் கடுகு இலையை சேர்த்து பேஸ்டாக மnறும் வரை அரைக்க வேண்டும். பின் இந்தக் கலவையை எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் இதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்ய தாடி நன்கு வளரும்.

ஆமணக்கு எண்ணெய் :
தினமும் இரவு படுக்கும் போது ஆமணக்கு அல்லது எள்ளு எண்ணெய்யை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ விரைவில் தாடி வளரும்.

முகம் கழுவுதல்: 
தினமும் இரவு படுக்கும் முன் சுடு தண்ணியை எடுத்து ஒரு துணியில் நனைத்து அதனை கொண்டு முகத்தை நன்கு துடைத்து எடுக்க தாடி வளர்ச்சி தூண்டப்படும்.

மசாஜ் :
தினமும் இரவு படுக்கும் முன் முகத்தை விலைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள் இதன் மூலமும் தாடி வளர்ச்சி தூண்டப்படும். Thanks sakki 5555

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக