புதன், 12 ஜூலை, 2017

வியர்க்குருவை தடுக்க சூப்பர் டிப்ஸ்



வியர்க்குருவை தடுக்க சூப்பர் டிப்ஸ்..

1. கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

2. வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும்.

 இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம்.

இதனை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

3. சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

4. வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும்.

5. அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

6. மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

 வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.

7. வெங்காய சாறை வியர்க்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.

8.சந்தனத்தை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் வியர்குரு மறைய தொடங்கும்.

9.சாதம் வடித்த கஞ்சியை வியர்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்க்குரு குணமாகும்.

10. வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’வியர்குரு போன்றறை வராது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக