வெள்ளி, 21 ஜூலை, 2017

திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65



திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65

நீங்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் , கிருஷ்ணகிரி சாலையில் ஜோய் ஆலுக்காஸ் எதிரில் ஒரு சிறிய நான்கு சக்கர தள்ளுவண்டியில் இந்த ஸ்பெஷல் நாட்டுக்கோழி சிக்கன் 65 தினமும் கிடைக்கும்.

இந்த நாட்டுகோழி சிக்கன் 65 ஒரு பிளேட் ரூ. 50 தான். இதன் சுவையை அனுபவித்தால் தான் தெரியும். சுவையில் நாவு சுவை நரம்புகள் அனைத்தும் நர்த்தனம் ஆடும்.

தேவையான பொருட்கள்

ஊறவைக்க
நாட்டுகோழி எலும்புடன் 1 கிலோ ( சிறிய சிறிய  துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
உப்புத்தூள் தேவையான அளவு
வரமிளகாய் தூள் 2மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
குருமிளகு தூள் 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 14 ( விழுதாக நைசாக அம்மிகல்லில் அரைத்தது )
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி
மைதா மாவு 2 மேஜைக்கரண்டி
தக்காளி விழுது 2 மேஜைகரண்டி
நாட்டுகோழி முட்டை 4
மரசெக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு

ஃட்ரை செய்ய

பொறித்த மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 7 ( பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)

கறிவேப்பில்ல 2 கொத்து
தயிர் 200 மில்லி
காஷ்மீரி வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

1. நாட்டுகோழியை துண்டுகளை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.

2. ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களிள் மரசெக்கு கடலெண்ணய்  தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்துகோங்க நன்றாக பிசிறி கொள்ள வேண்டும். குறைந்தபட்சமாக 3 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். இதில் துளிகூட தண்ணீர் சேர்க்க கூடாது. தேவைக்கேற்ப நாட்டுகோழி முட்டையை சேர்த்து கொள்ளலாம்.

3. இப்பொழுது இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் நன்றாக பிசிறி ஊறவைத்தள்ள நாட்டுகோழி துண்டுகளை போட்டு நன்றாக முறுகலாக பொன்னிறமாக சிறுதீயில் வைத்து வேக வைத்து எடுத்துக் எண்ணெய் வடிய விடவும்.

5. இப்பொழுது இரும்பு வடச்சட்டியை அடுப்புல வைத்து அதில் பொறித்த மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

6. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும்  வரை வதக்கவும்.

7. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் தயிரை சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயில் கொதிக்க விட்டு வதக்கவும் , அதில் காஷ்மீரி வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

9. இப்பொழுது அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அதில் முறுகலாக வறுத்து வைத்துள்ள நாட்டுகோழி துண்டுகளை சேர்த்துகோங்க நன்றாக மசாலாவில் கிளறவும்.

10. இதில் மசாலா அனைத்து துண்டுகளில் பட்டு நன்றாக கிளறி சிறிது நேரம் வேகவிட்டு கறி உடைந்து விடாமல் கிளறி , பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

11. எலுமிச்சம்பழம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக