செவ்வாய், 11 ஜூலை, 2017

அலுவலகத்தில் மன அழுத்தம் இல்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்ய இத மட்டும் செஞ்சா போதும்!...



அலுவலகத்தில் மன அழுத்தம் இல்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்ய இத மட்டும் செஞ்சா போதும்!*


அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்வதால் அதிக களைப்பு ஏற்படுகிறது.

 களைப்புடன் நீங்கள் வேலை செய்தால், வேகமாகவும், துல்லியமாகவும் வேலை செய்வது கடினம். 

இவ்வாறு அலுவலகத்தில் வேலை செய்யும் போது களைப்பு ஏற்பட்டால் அதனை எவ்வாறு போக்குவது என்பது பற்றிய சில டிப்ஸ்களை காணலாம்.

*🔖♨1. மிதமான இசை :*

நீங்கள் மிகவும் அதிகமான அளவு களைப்பை உணரும் போது ஒரு மிதமான இசையை கேட்கலாம். இது உங்களது களைப்பை போக்கி நீக்கி நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.
   
*🔖♨2. களைப்பை குறைக்கும் உணவு :*

சில உணவுகள் களைப்பை குறைத்து உங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும். புளூ பெரி, பாதாம், ஆரஞ்ச், ஒட்ஸ் போன்ற சிற்றுண்டிகளை சாப்பிடுவதன் மூலம் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.
   
*🔖♨3. 10 நிமிட நடை :*

நீங்கள் நீண்ட நேரம் உக்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவராக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை சிறிய நடைப்பயிற்சி செய்யுங்கள். இது ஒரு புத்துணர்ச்சியை தரும்.
   
*🔖♨4. யூ டியூப் சேனல் :*

பேஸ் புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை பார்ப்பதை விட, ஒரு ஐந்து நிமிடங்கள் உங்களுக்கு விருப்பமான யூடியூப் சேனலில் காமெடியான வீடியோக்களை கண்டு சிரிப்பது மூலம் உங்களது மூளை ரிலாக்ஸாக செயல்படும்.
   
*🔖♨5. அலுவலக பிரச்சனையா? :*

அலுவலகத்தில் அவ்வப்போது பணி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போவது இயல்பு தான். அந்த சமயத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான இடத்தில் ஒரு ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி, ஒரு பூ அல்லது கடல் என உங்களுக்கு பிடித்ததை நினைவில் நிறுத்து தியானம் செய்யுங்கள். இது மனதை நடுநிலைப்படுத்த உதவும்.
   
*🔖♨6. சூடான டீ :*

உங்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது ஒரு கப் க்ரீன் டீ குடியுங்கள். இதன் கப்பின் இதமான சூடு கூட உங்களுக்கு புத்துணர்ச்சியளிக்கும். க்ரீன் டீ பருகுவதால் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.
   
*🔖♨7. ஸ்ட்ரெஸ்  பந்து :*

ஸ்ட்ரெஸ் பந்துகள் ஒன்று அல்லது இரண்டினை உங்களது மேசையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் போது இதை பிரஸ் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
   
*🔖♨8. போனில் பேசுதல் :*

உங்களுக்கு மனசு சரியில்லை என்றால், உங்களது நண்பர் அல்லது உறவினர்களுக்கு போன் செய்து பேசுங்கள். இதனால் உங்களது மன அழுத்தம் குறையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக