வெள்ளி, 7 ஜூலை, 2017

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கான சில எச்சரிக்கைகள்



கான்டாக்ட் லென்ஸ் போடுபவர்கள் எச்சரிக்கையா இல்லென்னா கண் பார்வை பறிபோகும்…

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கான சில எச்சரிக்கைகள்

1.. லென்ஸ்களை உரிய திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். குழாய்த் தண்ணீரில் கழுவக் கூடாது. நீந்தும்போதோ, குளியல் தொட்டியில் குளிக்கும்போதோ, ஷவரில் நனையும்போதோ லென்ஸைக் கழற்றிவிடவும்.

2.. தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்படும்போது லென்ஸை மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்ற வேண்டும். கண்ணில் நீர் படும்படியான எந்தச் சூழலிலும் லென்ஸை அகற்றிவிடவும்.

3..கண்ணில் லென்ஸைப் பொருத்துவதற்கு முன்னர் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவவும். பிறகு சுத்தமாக ஈரம் போகத் துடைத்த பிறகே லென்ஸைத் தொடவும்.

4.. ஒவ்வொரு முறையும் லென்ஸைக் கழுவும் திரவம் புதிதாக இருக்கட்டும்.

5..உப்பு நீரால் ஒருபோதும் லென்ஸைக் கழுவாதீர்கள்.

6..லென்ஸைப் பாதுகாக்கும் குடுவையை உரிய திரவத்தில் முறையாகக் கழுவவும்.

7.. எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக அணியக் கூடாது. இடையிடையே ஓய்வு அளிக்க வேண்டும். தூங்கும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.

8.. பார்வை மங்கலானாலோ, வலி ஏற்பட்டாலோ, வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

9..புகை மண்டிய இடங்களைத் தவிருங்கள்.

10.. புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை

11.. உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.

12.. அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

13.. முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.

14.. மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.

15.. லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

16..நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.

17.. கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.

18.. லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக