திங்கள், 31 ஜூலை, 2017

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!..



மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி,

கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள்.

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்

கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.        கஷ்டம் தான் … ஆனா முடியும்.

10.      நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.

15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு

வேலையை ஆரம்பி.

25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு

ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,

அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி

இல்லையா?

31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே

போதும்.

32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

    * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

முயற்சியுடன் எழுந்திடுங்கள்!  உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.

எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.வெற்றி நமதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக