புதன், 19 ஜூலை, 2017

நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சில மருத்துவ குறிப்புகள்



நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சில மருத்துவ குறிப்புகள்

உலகெங்கிலும் நெஞ்செரிச்சல், உணவு எதிர்ப்பு போன்ற பாதிப்புகள் அநேகருக்கு இருக்கின்றன. 5-ல் 4 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 அதுவும் இரவில் ஒருவித கசப்பு உணர்வு, இருமல், தொண்டை பாதிப்பு சோர்வு என்ற பாதிப்புகளால் தூக்கம் இல்லாமல் மறுநாள் வேலைகளும் பாதித்து இருப்பவர்கள் அநேகம். அவர்களுக்கான சில குறிப்புகள்.

* ஆசிட் அதிகரிக்கச் செய்யும் உணவுகளைத் தவிருங்கள். உதாரணமாக: புளி, கிரேப்ஸ், ஆரஞ்சு, தக்காளி, வினிகர் சேர்த்த உணவுகளைத் தவிருங்கள்.

* மசாலா உணவுகள் அநேகருக்கு நெஞ்செரிச்சலைத் தருகின்றன. காரம், மிளகாய், மிளகு கூட தவிருங்கள்.

* சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரத்திற்கு படுக்காதீர்கள். ஈர்ப்பு சக்தி காரணமாக உணவும், ஆசிடும் இறங்கிவிடும்.

* கொழுப்பில்லாத உணவு, கொழுப்பு குறைந்த அசைவ உணவு இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். பொறித்த வகை உணவுகள் வேண்டவே வேண்டாம்.

* உணவு எதிர்ப்பதை தவிர்க்க சாக்லேட், ஆல்கஹால், காபி, கார்பனேட்டட் பானங்கள் இவை கூடாது.

* அளவு முக்கியம். பெரிய உணவாக எடுத்துக் கொள்ளாமல் சிறிதாக பல முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

* ஆல்கஹால் உணவுக் குழலும் வயிறும் இணையும் இடத்தினை அகலப்படுத்தி விடும். இதனால் உணவும், ஆசிட்டும் எதிர்த்து மேலே வரும் வாய்ப்பு கூடும். கவனம் தேவை.

* அதேபோன்று கோலா பானங்களும் உணவு, ஆசீட் மேலெழச் செய்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

* படுக்கப்போகும் முன் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடுவது இந்த பாதிப்பு உடையோருக்குக் கூடாது.

* படுக்கப் போவதற்கு 3 மணி நேரம் முன்பே அதாவது 7 மணிக்குள் உங்கள் இரவு உணவினை முடித்துக் கொள்ளுங்கள்.

* இறுகிய பெல்ட், பேண்ட் போன்றவற்றை அணியக் கூடாது. இது வயிற்றினை அழுத்தி நெஞ்செரிச்சலை கூட்டும்.

* சதா டென்ஷன், ஸ்டிரெஸ் என்ற வாழ்க்கை கூடவே கூடாது. இதுவும் நெஞ்செரிச்சலை விடாது அதிகரிக்கச் செய்யும்.

* எடை கூடுதலாக இருக்கின்றீர்களா. எடையைக் குறையுங்கள், பாதிப்பும் குறையும்.

* அடிக்கடி நெஞ்செரிச்சல் மாத்திரை போடுகின்றீர்களா? உடனடி மருத்துவரைப் பாருங்கள்.

* இரவில் ஒரு முறை சூயிங்கம் மெல்லுங்கள். இது உமிழ் நீரை அதிகரித்து ஆசீட் வீரியத்தினைக் குறைக்கும்.
 எப்போதும் இதனையே செய்ய வேண்டாம்.

* உங்களுக்கு பாதிப்பு எந்தெந்த உணவுப் பொருட்களினால் ஏற்படுகின்றது என்பதை நீங்களே ஆய்ந்து அறிய வேண்டும்.

* கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல், உணவு எதிர்ப்பு இவை இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவ ஆலோசனை பெறவும்.

* உணவு உண்ட இரண்டு மணி நேரம் பொறுத்தே உடற்பயிற்சி செய்யுங்கள்.

* புகை பிடிப்பது பாதிப்பினை வெகுவாய் கூட்டும். உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.

* தலையை உயர்த்தி வைத்து படுங்கள்.

* குனியும் பொழுது முட்டியினை மடக்கி குனியுங்கள். அப்படியும் மடிந்து குனிவது ஆசிட்டை மேலெழச் செய்யும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக