பாலூட்டும் தாய்மார்கள் குளிர்பானங்களை குடிக்கலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குளிர்ச்சியான நீரில் குளிக்கவோ, குளிர்ச்சியான நீரை பருகவோ கூடாது ஏன்?
குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாயின் உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கும். அப்போது குளிர்ந்த நீரில் குளித்தல் மற்றும் குளிர்பானங்களை பருகினால், அவர்களுக்கு சளி பிடிக்கும் பிரச்சனை ஏற்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சளி பிடித்து இருந்தால், அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் சளி அல்லது நீர்மங்கள் குழந்தையின் மீது பட்டால், அது குழந்தைகளுக்கும் பரவும்.
எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கவோ அல்லது குளிர்பானங்களை குடிக்கவோ கூடாது.
குளிர்ச்சியான பானம் தாய்ப்பாலின் தன்மையை மாற்றுமா?
தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், குளிர்ச்சியான பானங்களை குடித்தால், தாய்பாலின் தன்மை மாறாது. ஆனால் அதிகமாக ஐஸ் சேர்த்து குடிப்பதை தவிர்த்து அதிக நீர்மங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
தாய்மார்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்?
பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவுகள் மற்றும் வழக்கமான உணவுகளில் உள்ள கலோரிகளை விட, 400 கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பு
பால் கொடுக்கும் பெண்கள் குளிர்பானங்களை பருக நினைத்தால், பழங்களில் பிரஷ் ஜூஸ் செய்து, அதில் ஐஸ்கட்டிகளை போட்டு, மதிய வேளைகளில் குடிக்கலாம். இதனால் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக