எந்த பக்கவிளைவும் இல்லாமல் நேரத்தையும் விழுங்காமல் உங்கள் முகத்தை மேஜிக் செய்யும் இந்த குறிப்புகளை பார்க்கலாமா?
*பால் :*
காலையில் முதல் வேலையாக காய்ச்சாத பாலில் சிறிது பஞ்சை நனைத்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள்.
இதை விட மிகச் சிறந்த கிளென்சர் இல்லை.
அழுக்குகளை ஆழமாக நீக்கி விடும். முகத்தை பளிச்சிட வைக்கும்.
*முகத்திற்கு பயிற்சி :*
குப்புற படுத்தபடி, மெதுவாக கையை ஊன்றி, இரண்டு கால்களையும் அகலப்படுத்து எழுந்திருங்கள்.
தலையை மட்டும் தொங்க விட்டவாறு எழுந்தரிக்க வேண்டும்.
இந்த பயிற்சியால் அதிக ரத்தம் முகத்திற்கு பாயும். தசைகள் இறுகி, சுருக்கங்கள் மறைந்துவிடும்.
*ஐஸ் துண்டு :*
எப்போது நேரமிருக்கிறதோ அப்போது ஒரு ஐஸ் துண்டை எடுத்து முகத்தில் தேயுங்கள்.
இதனால் அடைப்பட்ட துளைகள் மூடும். தளர்ந்த சருமம் இருகி, முதுமையான தோற்றத்தை இள்மையாக்கும்.
(Use ice cube in cotton cloth n use. Dont use ice cube directly to face)
*ஆவி பிடித்தல் :*
நீரில் க்ரீன் டீத்தூளை போட்டு கொதிக்க வைத்து அதில் மஞ்சள் பொடி போட்டு ஆவி பிடியுங்கள்.
இவை முகப்பருக்களை தூர ஓட வைக்கும்.
*ரோஸ் வாட்டர் :*
அலுவலகம் கல்லூரியிலிருந்து களைத்து போய் வருகிறீர்கள். உடனே ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும்.
ஆனால் முகம் சோர்வாக இருக்கிறதே என தோன்றுகிறதா?
கவலை வேண்டாம்.
ரோஸ் வாட்டரை பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவுங்கள்.
இழந்த புத்துணர்ச்சியை முகம் மீண்டும் பெறும்.
*தக்காளி மசாஜ் :*
மிக எளிதானது. உங்கள் முகம் என்ணெய், முகப்பருக்களான் ஆனது என்றால் தக்காளி சிறந்த பொருள். தக்காளியை பாதியாக வெட்டி ஒரு பாதியில் முகத்தையும் கழுத்தையும் தேயுங்கள்.
1 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் ஜொலிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக