புதன், 12 ஜூலை, 2017

என்றென்றும் இளமையுடன் இருக்க...


என்றென்றும் இளமையுடன் இருக்க...
.
பழங்களிலேயே அதிகளவு சத்துக்களை கொண்ட அத்திப் பழத்தை தினசரி உட்கொண்டு வந்தால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது.

மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது, 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது.

எனவே செரிமானம் மேம்படுவதுடன் மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக