திங்கள், 25 மே, 2020

வருஷத்து 302 கோடி சம்பளம் வாங்கி என்னசார் பண்ணுதீங்க..?

வருஷத்து 302 கோடி சம்பளம் வாங்கி என்னசார் பண்ணுதீங்க..?

அதான் வாங்குற சம்பளத்துல 80 சதவீத சம்பளத்ததை
வைத்து, Googleலின் ஷேரை வாங்கி வைத்துள்ளனே ..
கிளிஞ்சுது, அதாவது ..

எவன்கிட்டே இருந்து சம்பளம் வாங்குறீங்களோ அவனுக்கே திரும்ப அந்த சம்பளத்த கடனா கொடுக்குறீங்க
அப்படிதானே சார்.. ?

இதுக்கு பேசாம ஊர்ல மாடே மேய்க்கலாம் சார்..
அமெரிக்கா கூகுள்னு ஓவர் பில்டப்பெல்லாம் பண்ணி பண்ணியே

ஊர்ல படிச்சிட்டு இருக்குறவனெல்லாம்
நான் சுந்தர் பிச்சை மாதிரி வருவேன்
நான் அப்துல் கலாம் மாதிரி வருவேன்னு
சொல்லிகிட்டு திரியாருணுக..

இவ்வளவு சம்பளம் வாங்குற நீங்க
சாரி நீங்க மட்டுமல்ல
உங்களைப் போன்று கோடானக்கோடி
பிறத்துறையை சார்ந்தவர்கள்
திங்குற சோற்றுக்கும்,குடிக்குற பாலுக்கும் கொஞ்சம் விவசாயத்துல முதலீடு பண்ணலாமே..?

எல்லாவனும் சேர்மார்க்கெட்டுல
கார் கம்பெனி மேலையும்,
போன் கம்பெனி மேலையும்
இப்படி எதெல்லாம் ஆடம்பரத்தேவைக்கானப் பொருளோ
அவற்றின் மீது முதலீடு செய்கிறீர்களே..

அடிப்படையை விடுத்து ஆடம்பரத்தின் மீது முதலீடு செய்யும் அறிவு என்னடா அறிவு..?

கோடி, கோடியா சம்பாதிக்கும்
சினிமா காரணும் இப்படி பலத்துறையை
சார்ந்தவனும் தான் சம்பாதித்தப் பணத்தை வைத்து கார் வாங்குறான்
ஏரோ பிளேன் வாங்குறான்
ஆனா ஒரு மாடு வளர்க்கவோ
அல்லது தன் சொந்தபந்த விவசாயிகளின் மீது முதலீடு
செய்வதற்கோ அல்லது  தானே முன்வந்து
விவசாயம் செய்வதற்கோ ஒருத்தன் கூடத் தயாராக இல்லை..

இல்ல ஒரு எம்ப்ளாயிக்கே 302 கோடி
சம்பளம்னா அப்போம் ஓனருக்கு
எவ்வளவு இலாபம்..?

அவன் அங்க உட்கார்ந்து கோடி கோடியா
தகவல் தொழில் நுட்பத்தை வைத்து
சம்பாதிப்பதற்கு..
தேசப்பக்தி என்றப் பெயரில் மக்கள் வரிப்பணத்தை வைத்து சேட்லைட்
அனுப்புறது, என்ன சார் நியாயம்..?

Tv சேனல் தனியாரு..
மொபைல் நெட்வெர்க் தனியாரு..
Google, what's App, face book போன்ற
ஹோலோபல் நெட்வெர்க் தனியாரு..
ஆனால் அந்த தகவல் தொழில் நுட்பத்தின் மூலத்தேவையான சேட்லைட்
அனுப்புறது யாரு..? அரசு..

கடலுக்கு மீன் புடிக்க போற வியாபாரிதான்டா மீன் பிடிக்க, மூலத்தேவையான  கப்பல வாங்கனும்..
மீனை விலைகொடுத்து வாங்கி திங்குற
நாங்க ஏன்டா கப்பலுக்கு கப்பம் கட்டனும்..?

அப்துல் கலாம் நல்ல மனிதர் நாட்டுக்காக தன் துறையில் சிறந்து விளங்கினார் ..அவ்வளவு தான்..
அதற்காக மனிதகுல மாணிக்கம்,மனிதகுல நன்மைக்காக வாழ்ந்தார் இதெல்லாம் ரெம்ப ஓவரு..

மேலும் அவரே ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும்
முன்னோடி என்பதெல்லாம் பெருத்த முட்டாள் தனமே.. அவரதுத் துறையை சார்ந்தவர் அவரை மெச்சட்டும்.. ஒட்டுமொத்த
கல்வியிலும்,அத்துனை மாணவர்களுக்கும் முன்னோடியாக இதுபோன்ற அறிவியல் வல்லூநர்களை
முன்னிருத்துவது மிகமிகத்தவறு..

நெல் ஜெயராமன் யாருனுத் தெரியாது
நம்மாழ்வார் யாருனுத் தெரியாது

ஆனா சுந்தர் பிச்சை யாருனுத்தெரியும்
அப்துல் கலாம் யாருனுத் தெரியும்..

நதி நீர் இணைப்புத் திட்டத்தை
ஐயா அப்துல் கலாம் ஆதரித்தார்..
நதிநீர் இணைந்தால் பாசன வசதி கூடுமாம்

அடப்பாவமே, பெரும் நதியை பல்வேறு கிளைநதிகளாக பிரித்தால் தான்
பாசன வசதி கூடுமென்பது சிறுக் குழந்தைக்குக்கூட தெரியும்..

அதை விடுத்து இரண்டு பெரும் நதியை இணைப்பது மகா முட்டாள் தனம்..

அனு உலையால் எந்த பாதிப்பும்
இருக்காது என்று கூறி அனு உலையை
ஆதரித்தவர் ஐயா அப்துல் கலாம்..
கூடங்குளம் அனு உலை வெடித்தால்
500 கிலோமீட்டர் பரப்பளவிற்கு புள்ளுக்கூட முளைக்காது..
என்பதை எல்லாம் அறியாதவரா ஐயா அப்துல் கலாம்..?
அனுக்கழிவை எங்கேக் கொட்டுவது..?
தெரியாது..?
கடல்ல கொட்டுனா கடல் உயிர்கள் பாதிக்கப்படும்..

குடிக்கிற பாலிலும், திங்குற சோற்றிலும்
தரமில்லை ஆனால்
தரமான காரு,தரமான வீடு,தரமான தங்கம்,தரமான புல்லட்டு ட்ரெயினு, தரமான மின்சாரம், தரமான பெட்ரோல்,தரமான டீசல்,தரமான மீத்தேன் 
எதுக்குடா..இதெல்லாம்..?

உலகிலேயே மிக சிறந்த ஆயுதம்
நீரும், சோறும் தான்..
ஒரு நேரம் உண்ணாமல்,பருகாமல் இருந்தால் தெரியும் சோறும்,நீரும் என்னவென்று..
ஆயிரம் துப்பாக்கியை உருவாக்குவது அல்ல வளர்ச்சி..
தான் உண்ணும் தரமான உணவை
உணவுத் தானியத்தை பாதுகாத்து
விவசாயத்தை பாதுகாத்து
தன் பிள்ளைகளுக்கும் கொடுப்பதுவே
சரியான போக்கு...

நான் குடிக்கும் மாட்டுபால் என் மகனுக்கு
கிடைக்குமா என்பதில் உத்ரவாதம் இல்லை..
நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் அரிசியே நாரிவிட்டது என் மகனுக்கும்,மகளுக்கும் பேரனுக்கும் பேத்திக்கும் சத்தான உணவு தானியங்கள் கிடைக்குமா என்பதில்
எந்த உத்ரவாதமும் இல்லை..

ஆனா வீடு,காரு,புல்லட் ட்ரெயின்,7G போனுக்கு தயாரா இருக்கீங்க..
எல்லாவனையும் ஆடம்பரத்த காட்டியே ,
அறிவியல் வல்லூநர்களை காட்டியே
ஏமாத்துறதுக்கு பெயரு வளர்ச்சி ..
போங்கடா நீங்களும் உங்க வளர்ச்சியும்
இது போன்ற அறிவியல் வளர்ச்சி பிம்பங்களைத் துடைத்து தூரப்போட  வேண்டிய காலமிது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக