வெள்ளி, 8 டிசம்பர், 2017

பெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க



பெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க

பெண்களே கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

கருவில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்கு எப்படி கருவில் இருந்தே அறிவை ஊட்டி வளர்க்க முடியும் என்பதில் சந்தேகம் இருக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் தினமும் சிறிதளவு நேரத்தையாவது ஒரு நல்ல புத்தகத்தை படிக்க எடுத்துக் கொள்ளுங்கள். தாய் ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலமாக தனது குழந்தைக்கும் அறிவை ஊட்ட முடியும்.

கர்ப்பகாலத்தில் பாட்டு பாடுவது என்பது உங்களது மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும். அதோடு மட்டுமில்லாமல் இது உங்களது குழந்தையும் மூளையையும் கூட அறிவுப்பூர்வமானதாக மாற்றும்.

கர்ப்ப காலத்தில் நமது காதுகளில் விழும் வார்த்தைகளும், நமது மனதில் தோன்றும் எண்ணங்களும், அடுத்தவர்களிடம் பேசும் வார்த்தைகளும் நல்லதாக மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் உங்களது குழந்தைக்கு கருவில் கற்பிக்கும் வாழ்க்கைப் பாடமாகும்.

கர்ப்பிணி பெண்கள் உங்களது வயிற்றினை மசாஜ் செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் இது போன்று மசாஜ் செய்து விடுவதால் குழந்தைகளின் தொடு உணர்வு அதிகரிக்கும்.

கருவில் குழந்தை இருக்கும் போது, பெண்கள் எப்போது சிரித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வேண்டாத விஷயங்களை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பது கண்டிப்பாக கூடாது. இது குழந்தையை பாதிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி வெளியில் இயற்கை நிறைந்த இடங்களுக்கு சென்று வருவது வேண்டும். கடற்கரை, பசுமையான இடங்கள், அழகான உணவகங்கள் என வெளியில் சென்று வருவதால் குழந்தை கருவில் இருக்கும் இரண்டாம் பருவ காலத்தில் பல சூழ்நிலை மாற்றங்களை உணர முடியும். அதுமட்டுமின்றி தாயின் மனதும் வெளியில் சென்று வருவதால் ரிலாக்ஸ் ஆகிறது.

குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பசியுடன் இருப்பது மிகவும் தவறான ஒன்று. நீங்கள் தேவையான சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும் உங்களது குழந்தையை சிறப்பாக பெற்றெடுக்க முடியும். நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் என வகைவகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக