திங்கள், 25 டிசம்பர், 2017

மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?


மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?


✴ மார்கழி மாதம் நம் உடம்பை திடப்படுத்திக் கொள்ளவும், ஆற்றலைப் பெருக்கி சேமித்துக் கொள்ளவும், உடலில் சமன்பாட்டைக் கொண்டு வரவும் சாத்தியமான காலம் ஆகும். ஏனெனில் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிலிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது.

✴ மார்கழியில் பு மியின் வடபாதியில் புவிஈர்ப்பு விசை குறைவாகவே இருக்கும். இந்நிலையில் விதைவிதைத்தால் அது முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும்.

✴ இயற்கைக்கே இந்நிலை என்றால் மனிதனின் நிலை என்னவாகும். ஆதலால் தான் இம்மாதத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை நம் முன்னோர் மேற்கொள்ளாமல் இம்மாதத்தை வழிபாட்டிற்கென்றே ஒதுக்கி வைத்தனர்.

✴ ஆதலால் தான் பனிரெண்டு மாதங்களில் வழிபாடுகளுக்கென்றே தனியாக ஒதுக்கப்பட்ட இம்மார்கழி மாதத்தில் நம் முன்னோர் சுபநிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில்லை. எனினும் அதற்கான முன்னேற்பாடுகளான பெண்பார்த்தல் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

✴ மார்கழி மாதத்தில் சு ரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமநிலைக்கு கொண்டுவருவதற்கு உகந்த நேரமும் இதுதான். நம் உடலை நாம் பாதுகாக்கத் தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடினால் உடல் வலிமை பெறும்.

✴ மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு உறுதியான நிலையையும், மன அமைதியையும் கொடுக்கிறது. இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக(உறுதி) இருப்பதற்கும், அடுத்து வரும் தை மாதம் நகர்ந்து முன்னேறுவதற்கும் பயன்படுகிறது. உடல் நிலை திடமாக இருந்தால்தான் வாழ்க்கையை சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திடப்படுத்தவும், சமநிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது.

✴ மார்கழியை பொறுத்தவரை பருவநிலை மாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட வகைப் பயிர்கள் அறுவடைக்காக காத்திருக்கும். எனவே இதனை அறுவடைக் காலமாகவும் முன்னோர்கள் கருதினர். இது போன்ற காரணங்களால் தான் திருமணத்தை இந்த மாதத்தில் நடத்தாமல் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக