புதன், 29 நவம்பர், 2017

கிவி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-



கிவி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-

1. இந்த பழத்தில் 5% இரும்பு சத்து அடங்கியுள்ளது. தினமும் இதை சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படாமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

 2.கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால் இரத்தம் உற்பத்தி அதிகரிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்துகளில் ஒன்று போலிக் அமிலம். கிவி பழத்தில் அதிக அளவிலான போலிக் அமிலம் நிறைந்துள்ளது.

3. இரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கிறது.

4.கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளை அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை அதிகரிக்கிறது.

5.அளவுக்கு அதிகமான வைட்டமின் – சி மற்றும் நார்சத்துகள் அடங்கியுள்ளதால் உடல் மற்றும் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

6.அதிக அளவில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழிக்கிறது.

7.கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.

 8.அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

9. இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக