இன்றைய பரபரப்பான அவசர உலகில் ஓட்ஸ், பிரெட் ஆகியவை தான் பிரதான காலை உணவுகளாகிவிட்டன.
அதனால் நாமும் அவற்றை கடைகளில் அப்படியே எதையும் கவனிக்காமல் வாங்கி வந்துவிடுகிறோம். ஆனால் நாம் பிரெட் வாங்கும்போது வேறு என்ன மாதிரியான விஷயங்களையெல்லாம் பார்த்து வாங்க வேண்டும்?
ஒயிட் பிரெட் நல்லதா? இல்லை பிரௌன் நல்லதா என்ற குழப்பத்திலேயே பலரும் இரண்டு வகை பிரெட்டையும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இனிமேலாவது பிரெட் வாங்கும்போது கீழ்வரும் சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள்.
முழு தானியங்கள் அடங்கிய பிரெட்டைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைகளில் வாங்கும்போது ஃபுல் கிரெய்ன் என்று போடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்
அத்தகைய ஃபுல் கிரெய்ன் பிரெட்டுகளில் தான் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், மினரல்கள் ஆகியவை இடங்கியுள்ளன. இப்போது பருப்பு வகைகள், பிரௌன் அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை அடங்கிய பிரெட்டகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சாப்பிடலாம்.
ஒயிட் பிரெட் வாங்குவதை முதலில் தவிர்த்திடுங்கள். அவை முழுக்க முழுக்க மைதாவினால் செய்யப்பட்டிருக்கும்.
பிரெட் வாங்கும்போது அது 100 சதவீதம் முழுதானியம் என்று முத்திரை இடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.
அந்த லேபிள் இருந்தால் நீங்கள் வாங்கும் பிரெட்டில் 16 வகையான பருப்பு வகைகளும் தானியங்களும் அடங்கியுள்ளன என்று அர்த்தம்.
லேபிள் இல்லையென்றால் அதில் வெறும் 50 சதவீத சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளன.
நீங்கள் வாங்கும் பிரெட்டுகளில் நார்ச்சத்துக்கள எவ்வளவு நிரம்பியுள்ளன என்று பார்க்க வேண்டும். குறைந்தது 3 தானியங்களாவது இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஏனெனில் அவை உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
பிரெட்டில் ஈஸ்ட் கலக்கப்படுவதால் விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடையது. அதனால் தயாரித்த தேதியைப் பார்த்து வாங்குவது மிக அவசியம். எந்த பிரெட்டாக இருந்தாலும் ஒரு வாரத்துக்கும் மேல் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக