பெண்களைப் போற்றும் வாக்கியங்கள்
பெண்களை போற்றுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும் சரி, புலவர்களும் சரி, அனைவருமே நன்கு பயன்படுத்திவிட்டனர்.
நம் இந்தியாவில் ஒரு படி மேலே போய் நதி அனைத்திற்கும் பெண்களின் பெயரையே வைத்து சிறப்பித்தனர்.
நம்மைத் தாங்கும் பூமியையும் பூமாதேவி என்றும், நிலாவை பெண்ணாக உருவகப்படுத்துவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பெண்மையை சிறப்பிக்கும் சில மொழிகள் உள்ளன. அவை,
தாயைச் சிறந்த கோயிலும் இல்லை.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பார்.
ஆண் புத்தி முன் புத்தி, பெண் புத்தி பின் புத்தி. (பின்னால் நடக்கப்போவதையும் சிந்தித்துச் செயல்படுவாள்.)
அரிது அரிது பெண்ணாய் பிறப்பது அரிது - ஒளவையார்
ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்கு சமம் - ஹெர்பட்
பெண்ணும், ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள் - பெஞ்சமின் பிராங்ளின்
பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனி த சமுதாயம் அறிவும் வளர்ச்சியும் பெறுகிறது - ஹெரிடன்
அழகான பெண் கண்களுக்கு விருந்து அளிக்கிறாள். குணமுள்ள பெண் இதயத்துக்கு இதம் அளிக்கிறாள் - நெப்போலியன்
வாஞ்சையின் சரித்திரம்தான் பெண்ணின் வாழ்க்கை - இர்விங்
விண்ணுலகில் கவிதை மலர்கள் விண்மீன்கள். மண்ணுலகில் கவிதை மலர்கள் பெண்கள் - ஹார்கிரேவ்
ஆண்களின் வாதம் சாதிக்காததை பெண்களின் பார்வை சாதித்துவிடும் - ஹெவில்.
அன்னையை எவரோடும் ஒப்பிடக் கூடாது, அவள் ஈடற்றவள்.
தந்தையின் அன்பு கல்லறை வரை, தாயின் அன்பு உலகுள்ள வரை.
பெண்ணின் அழகற்ற மனதைவிட அழகற்ற முகமே சிறந்தது.
Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக