‘’புன்னகை என்னும் மாய சக்தி..’’
நாம் எங்கு சென்றாலும் யாராவது ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தால், நமக்கு, ‘அப்பாடா’ என்றிருக்குமல்லவா? புன்னகையின் சக்தி அப்படி. அதற்கு வேறு பயன்களும் இருக்கின்றன.
எல்லாமே விஞ்ஞான ரீதியில் உண்மை ஆனவை.
புன்னகை நம்மை வசீகரமானவராகக் காட்டும். நம்மை அழகாகக் காட்டுவதற்கு நூற்றுக்கணக்கில் செலவழிக்கிறோம்.
என்னதான் பூச்சு, அலங்காரம் இருந்தாலும் அதனுடன் உண்மையான புன்னகை இல்லை என்றால் எப்படி இருக்கும்? அழகை வசீகரமாக்குவது புன்னகைதான்.
இருவர் இருந்தாலும் இருபது பேர் இருந்தாலும், ஒரே நபர் புன்னகைத்தாலும் அனைவருக்கும் பரவும். அந்த இடத்தின் நிலையே மாறிவிடும். நேர்மறைச் சிந்தனையில் தொடர்ந்து இருக்க உதவும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சிறிது நேரம் இயல்பாக உட்கார்ந்திருங்கள். ரத்த அழுத்தத்தை சோதியுங்கள். அதைக் குறித்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் ஒரு நிமிடம் ஏதாவது நல்ல விஷயத்தை நினையுங்கள். அதன் பின் மறுபடியும் ரத்த அழுத்த சோதனை செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்த நிலை குறைந்தே இருக்கும்.
நாம் மனதளவில், உடலளவில், சோர்ந்து, களைத்து இருக்கிறோம் என்பதை மறைக்க நூறு வார்த்தைகளுக்குப் பதிலாக ஒரு புன்னகை போதும்.
ஆகையால் புன்னகையுங்கள்.செலவின்றி அனைத்து வகையிலும் லாபம் பெற உதவும். புன்னகைக்க முகத்தில் 17 தசை நார்கள் வேலை செய்தால் போதும்.
முகம் சுளிக்க? 43 தசை நார்கள் வேலை செய்ய வேண்டும். இப்போது சொல்லுங்கள் அனைத்தையும் மறந்து புன்னகைக்கலாம் அல்லவா!
ஆம்.,நண்பர்களே..,
நாம் மனதளவில், உடலளவில், சோர்ந்து, களைத்து இருக்கிறோம் என்பதை மறைக்க நூறு வார்த்தை களுக்குப் பதிலாக ஒரு புன்னகை போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக