திங்கள், 23 செப்டம்பர், 2019

புதைந்து வரும் அந்தக் காலம்... பரிசாக கொடுப்போம் நம் சந்ததியினருக்கு..! எழிலாய் பழமையே பேசும்.... அந்தக் காலம்..... இந்தக் காலம்..!



புதைந்து வரும் அந்தக் காலம்... பரிசாக கொடுப்போம் நம் சந்ததியினருக்கு..!
எழிலாய் பழமையே பேசும்.... அந்தக் காலம்..... இந்தக் காலம்..!

'அது அந்தக் காலம், இது இந்தக் காலம்" என்று சொன்னால் நமக்கு சிறு வயதில் கேட்ட திரைப்பட பாடல் தான் ஞாபகத்திற்கு வரும்.

'காலம் கண் போன்றது...
கடமை பொன் போன்றது".
எனவே, காலத்தின் அருமையை உணர்ந்து கிடைக்கும் நேரத்தையும், சந்தர்ப்பங்களையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமைத்து கொள்ளுங்கள்.

உண்மையிலேயே அந்தக் கால நினைவுகளை நினைத்துப் பார்த்தால், நம் மனதிற்கு இதமாக இருக்கும்.

சரி, நாம் இன்று அந்தப் பொற்காலத்தில் மகிழ்ந்துள்ள நினைவுகளையும், இந்தக் காலத்தில் இழந்துள்ள விஷயங்களையும் பற்றி பார்க்கலாம்.

தொலைக்காட்சியில் இரண்டு சேனல்கள் வந்தாலே சந்தோஷத்தில் துள்ளி குதித்தது - அந்தக் காலம்.

இருநூறு சேனல் இருந்தபோதும், சேனலை மாற்றி மாற்றி கை அலுத்துப் போவது - இந்தக் காலம்.

திருவிழாவில் இரவு நேரங்களில் நண்பர்களோடு சினிமா பார்க்க சென்றது - அந்தக் காலம்.

திரையரங்குபோல் வீடு இருந்தும், சினிமாவை சேர்ந்து பார்க்க நண்பர்கள் இல்லாமல் இருப்பது - இந்தக் காலம்.

உற்றார் உறவினர்களுடன் கூடி வாழ்ந்தது - அந்தக் காலம்.

சோபா, செல்போனுடன் சேர்ந்து வாழ்வது - இந்தக் காலம்.

பாட்டியிடம் கதைக்கேட்டு மகிழ்ந்தது - அந்தக் காலம்.

சமூக வலைதளங்களில் கதைக்கேட்டு மகிழ்வது - இந்தக் காலம்.

கரிசல் காட்டில் காலை முதல் மாலை வரை உழைத்தது - அந்தக் காலம்.

கம்ப்யூட்டர் ஃ கைப்பேசி இல்லாமல் நாளை தொடங்க முடியவில்லை - இந்தக் காலம்.

குனிந்து, வளைந்து வேலை செய்வதே உடற்பயிற்சியாக இருந்தது - அந்தக் காலம்.

கூகுளில் உடற்பயிற்சி செய்வது எப்படி? எனத் தேடுவது - இந்தக் காலம்.

உரலையும், குழவியையும் வைத்து சமைத்து சாப்பிட்டது - அந்தக் காலம்.

மிக்ஸி, கிரைண்டரை வைத்து சமைத்து சாப்பிடுவது - இந்தக் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வரும் அந்தக் காலத்தை...!
புதையல் பரிசாகக் கொடுப்போம் நம் சந்ததியினருக்கு...!

இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா?

உங்களின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து மகிழ விரும்புகிறீர்களா?

உங்களின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து மகிழ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக