ஒருமுறை.. இருமுறை அல்ல... 638 முறை... அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனம் என்றால் மிகையில்லையே..!!..!!

👉ஃபிடல் காஸ்ட்ரோ பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும், அமெரிக்காவிற்கும் நேரடியான மோதல்கள் நடைபெற தொடங்கியது. ஆனால் இதையெல்லாம் ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்.
👉இந்த மோதல்களில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா, எப்படியாவது ஃபிடல் காஸ்ட்ரோவை தன் பக்கம் தக்க வைத்துக்கொள்ள திட்டம் தீட்டியது. ஆனால், அமெரிக்கா தீட்டிய அனைத்து திட்டங்களுமே தோல்வியிலேயே முடிந்தது.
👉ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவிற்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்திற்கும் அது கிடையாது என அறிவித்தார்.
👉ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்த இந்த அறிவிப்பினால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடையால் கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
👉இந்த இக்கட்டான சூழலில், கியூபாவிற்கு உதவ ரஷ்ய அரசு முன்வந்தது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய ரஷ்ய அரசு சம்மதித்தது.
👉நாளுக்குநாள் எழுச்சி பெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் இந்த வளர்ச்சியை, அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றது அமெரிக்கா.
👉ஃபிடல் காஸ்ட்ரோவுடனான நேரடி மோதல்கள் எதுவும் வெற்றி பெறாததால் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் தீட்டியது.
👉ஃபிடல் காஸ்ட்ரோ கொலை செய்ய ஒரு முறை, இருமுறை அல்ல 638-க்கும் அதிகமான முறை கொல்ல முயற்சிகள் மேற்கொண்டது அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு.
👉அதாவது
👉சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது
👉ரசாயனக் குண்டுகள் போடுவது
👉மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது
👉விஷ மாத்திரைகளைக் கொடுப்பது
👉விபத்தினை ஏற்படுத்துவது
👉துப்பாக்கியால் சுடுவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி 638-க்கும் மேற்பட்ட முறையில் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் காஸ்ட்ரோ தப்பித்துக் கொண்டே இருந்தார்.
👉ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக