ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கரும்பு !!! ஒரு இனிப்பான வரலாறு...


கரும்பு !!! ஒரு இனிப்பான வரலாறு...

"கரும்பு தின்ன கூலி வேண்டுமா?" என்பது பழமொழி. கரும்பு என்றாலே தைப்பொங்கல்தான் நம் நினைவுக்கு வரும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கரும்பு பற்றிய சுவையான சில தகவல்களைப் பார்ப்போம்.

தோற்றம்

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாக பயிரிடப்பட்டது. கி.மு.500-ம் ஆண்டு இந்தியாவில் சீனி தயாரிக்க ஆரம்பித்தனர். இது கி.மு.100ல் சீனாவுக்கும் பரவியது. பிரேசில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. கரும்பு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சீனி கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

தமிழர் பண்பாட்டில் கரும்பு

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று சொல்வார்கள். அதனால்தான், தைப் பொங்கல் அன்று கரும்பை முக்கிய உணவாக வைத்து கொண்டாடுகின்றனர். கரும்பு, அதியமானின் முன்னோரால் கொண்டு வரப்பட்டது என்றார் அவ்வையார். அத்தகைய சிறப்பு வாய்ந்தது கரும்பு.

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்

வெல்லம், பழுப்புச் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவை கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

கரும்பின் மருத்துவக் குணங்கள்

* மஞ்சள் காமாலை

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

* தொற்றுநோய்கள்

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

* சிறுநீரக கற்கள்

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

* நீரிழிவுக்கு கரும்பு

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

* ஊட்டச்சத்துக்கள்

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

* சளி, இருமல் மற்றும் தொண்டை வலி

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

* புற்றுநோய்

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுதவலது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக