வியாழன், 18 ஜனவரி, 2018

ஆரத்தி காட்டும் விதம்


ஆரத்தி காட்டும் விதம்

வீட்டில் விளக்கேற்றி பாடல்கள் ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும். அது முடிந்ததும், கற்பூர ஆரத்தி அல்லது தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

 இறைவனுக்குரிய உபசாரங்களில் விசேஷமானது இது. வழிபாடு செய்பவர் வலக்கையால் ஆரத்தி தட்டினை எடுத்துக் கொண்டு பூஜிக்கும் தெய்வத்தின் அங்கம் முழுவதும் தீபஒளி படருமாறு காண்பிக்க வேண்டும்.

இதனை பிரணவ மந்திரமான "ஓம்' வடிவில் மூன்று முறை சுற்றும்படி ஆகம சாஸ்திரம் கூறுகிறது.

 சில ஆகமங்களில் சுவாமியின் பாதத்தில் நான்கு முறையும், வயிற்றுப்பகுதியில் இருமுறையும், முகத்திற்கு நேராக ஒருமுறையும் சுற்றிய பின், இறுதியில் சுவாமியை முழுவதுமாக மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக