ஆண்களை விட பெண்களின் ஆயுள் அதிகம் ஏன்? - அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்...
*ஆண்களை விடவும் பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்தாகவும், இதற்கு அவர்களது உடல் மற்றும் மரபியல் ரீதியான காரணங்கள் இருப்பதாகவும் அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்களை ஒப்பிடுகையில் உடல் வலிமையை வைத்து, பெண்கள் பலவீனமானவர்கள் என சொல்லப்படுவதுண்டு. ஆனால், வாழ் நாட்களை பொறுத்தவரை, ஆண்களை விடவும் பெண்கள் அதிககாலம் உயிர் வாழ்வதாக ஏற்கனவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் துர்ஹமில் உள்ள டியூக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்களது ஆய்வு சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘பெண்கள் மரபியல் ரீதியாகவும் சரி, உயிரியல் ரீதியாகவும் வலிமையாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே, ஆண்களை விடவும், பெண்களுக்கு கூடுதலான ஆயுட் காலம் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சம், தொற்று நோய் பாதிப்பு என பல சூழல்களிலும், ஆண்களை விடவும், பெண்கள் அதை எதிர்கொண்டு அதிகஅளவில் தாக்குப்பிடித்து வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறந்த குழந்தைகளில் கூட ஆண் குழந்தைகளை ஒப்பிட்டால், பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளன. ஆண்களை விடவும், பெண்களின் வாழ்நாள் அதிகரித்து இருக்க மரபியல் ரீதியான காரணங்களும், சுரபிகளும் கராணமாக இருக்கலாம். குறிப்பாக எஸ்ரோஜன் ஹார்மோன்கள், அவர்களுக்கு நோய் எதி்ப்பு சக்தியை அதிகமாக வழங்குகிறது. எனவே அவர்கள் தொற்றுநோய் உள்ளிட்டவை பரவும் போது அதை எதிர்கொள்ளும் திறன் அவர்களின் உடலுக்கு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் வெர்ஜினியா சரோலில் கூறுகையில் ‘‘கடந்த 250 ஆண்டு காலம், ஆண் - பெண் விகிச்சார அடிப்படையிலான இறப்பு விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.. அதன் அடிப்படையில் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஆண்களை விடவும், பெண்களின் வாழ்நாள் அதிகம் இருந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது. அதில் ஆண்களை விடவும் பெண்கள், ஆறு மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை கூடுதல் காலம் வாழ்ந்துள்ளதும் உறுதியாகியுள்ளது அதற்கான காரணங்களை ஆய்வு செய்தபோது மரபியல் மற்றும் உயிரியல் காரணங்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்’’ எனக்கூறினார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக