ஞாயிறு, 14 ஜனவரி, 2018

"தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் " என்று முழங்கிய எழுவரை நினைவு கூறுவோம்!



"தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் " என்று முழங்கிய எழுவரை நினைவு கூறுவோம்!

1921ஆம்ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் பேராசிரியர் கா.நமச்சிவாயர் முன்னிலையில் தமிழாண்டு தீர்மானிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் திருவள்ளுவராண்டை  தொடக்கமாகக் கொண்டு தை முதல் நாளில் தமிழாண்டுத் தொடக்கம் என்பதை தமிழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், திருவள்ளுவராண்டுத் தொடக்கம் கி.மு.  31 என்பதால் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்றும், அதன் முடிவு மாதம் மார்கழி என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவானது கீழ்க்கண்ட தமிழறிஞர்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.
1.மறைமலையடிகள்
2.பேரா.கா.நமச்சிவாயர்
3.தமிழ்த் தென்றல் திரு.வி.க.
4. தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியர்
5. நாவலர் வேங்கடசாமி நாட்டார்
6. நாவலர் சோமசுந்தர பாரதியார்
7. சைவப் பெரியார் சச்சிதானந்தம்

இக் கருத்தரங்கத்திற்கு 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஏற்பிசைவு வழங்கினர்.

இந்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலையடிகள் மேலும் உறுதிப்படுத்தினார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். (1935+31=1966). அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
( பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

 திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2049. ( 2018+31=2049)

திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவோம்!
நாம் தமிழர் என்று நிலை நாட்டுவோம்!

திருவள்ளுவர் ஆண்டை உலகில்  வாழும் தமிழர்களுக்கு அறிவித்த ஏழு தமிழறிஞர்களை இந்த தமிழர் திருநாளில்  நினைவு கூறுவோம...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக