புதன், 20 டிசம்பர், 2017

விடுகதைக‌ள் எ‌ன்பது வெறு‌ம் ‌விளையா‌ட்ட‌ல்ல... நமது ‌சி‌ந்தனைகளு‌க்கு ஒரு ப‌யி‌ற்‌சியு‌ம் ஆகு‌ம்.



விடுகதைக‌ள் எ‌ன்பது வெறு‌ம் ‌விளையா‌ட்ட‌ல்ல... நமது ‌சி‌ந்தனைகளு‌க்கு ஒரு ப‌யி‌ற்‌சியு‌ம் ஆகு‌ம்.

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

விடைகள்:

1. சைக்கிள், 2. பட்டாசு, 3. தராசு, 4. எறும்புக் கூட்டம், 5. அஞ்சல் பெட்டி.

------------------------------------------------------------------

கீழே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரி‌ந்தா‌ல் கூ‌றி‌விடு‌ங்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ற்கு‌ப் போ‌ய் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

3. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?

4. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?

5. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?

6. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?

7. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

8. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?

9. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

10. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?



விடைக‌ள்

1. வாழைப்பூ

2. பேனா

3. நாவல் பழம்

4. தேங்காய்

5. காய்ந்த மிளகாய்

6. நீர்க்குமிழி

7. விரல்கள்

8. பம்பரம்

9. கிளி

10. பூனை

--------------------------------------------------------------------------------------------

விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள். படி‌த்து‌வி‌ட்டு ‌விடைகளை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

1. தீக்குச்சி

2. தபால் தலை

3. கடல் அலை

4. சாமரம்

5. வெங்காயம்

6. செல்பேசி

-------------------------------------------------------------------------------------------

1) உச்சியிலே கிரீடம், உடம்பெல்லாம் கண்
–அது என்ன?
-

2) எப்போதும் கிடைக்காத மதி, எல்லோரும்
விரும்பும் மதி – அது என்ன?
-

3) இரவெல்லாம் பூக்காடு, பகலெல்லாம் வெறுங்காடு
- அது என்ன?
-
4) உச்சிக் குடுமிக்காரன், கொள்ளிவச்சா வெடிப்பான்
-அது என்ன?
-

5) பெட்டியைத் திறந்தால் கிருஷ்ணன் பிறப்பான்
-அது என்ன?



விடைகள்:
-
1) அண்ணாசிப்பழம்
2) நிம்மதி
3) வானம்
4) பட்டாசு
5) வேர்க்கடலை

-------------------------------------------------------------------------------------------



1) பார்த்தால் பசப்புக்காரி, சுவைத்தால் கசப்புக்காரி
- அது என்ன?
-
2) குறுக்குச் சிவந்திருப்பாள், செவ்விதழை ஒத்திருப்பாள்,
வால் முளைத்திருப்பாள், வந்திடுவாள் சந்தைக்கு
- அவள் யார்?
-
3) மலரைத் தழுவுவது , மாதர் மனதைத் தொடுவது,
தெற்கில் வருவது தீண்ட முடியாதது – அது என்ன?
-
4) பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன?
-
5) பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன?
-
==============================================
விடைகள்:

-
1) பாகற்காய்
2) மிளகாய்ப்பழம்
3) தென்றல் காற்று
4) எலுமிச்சம்பழம்
5) அன்பு

--------------------------------------------------------------------------------------------

1) அண்ணன், தம்பி ஐவர், ஆனால் ஒவ்வொருவரும்
ஒரு உயரம் – அவை என்ன?
-
2) காய் அவள், பழுப்பாள் என்று பார்த்தால்,
வெடித்தாள்.- அது என்ன?
-
3) உயிர் உள்ளவரை, இரவும்,பகலும் இவள் விழிதிருப்பாள்
அது என்ன?
-
4) பச்சை நிறத்தழகி
பவளவாய்ச் சொல்லழகி
வீட்டிலும் இருப்பாள்
காட்டிலும் இருப்பாள் – அது என்ன?
-

5) கோபத்திற்கு வாயைக் காட்டுவான்
நன்றிக்கு வாலைக் காட்டுவான் -அது என்ன?
-
===================================
விடைகள்:
1) கை, கால் விரல்கள்
2) இலவம்பஞ்சு
3 இதயம்
4) கிளி
5) நாய்

--------------------------------------------------------------------------------------------



1) காலம் காட்ட இந்தக் கரிசன ஓட்டம் – அது என்ன?
-
2) குரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன?
-
3) பச்சைப் பசேல் என்றிருக்கும். வாய் வைத்தால் கசக்கும்.
குழம்பு வைத்தால் ருசிக்கும் – அது என்ன?
-
4) கண்ணைக் குத்தி தின்றேன். பசியும் மாறிப்போச்சு -
அது என்ன?
-
5) விரும்பி வாங்குபவர்கள் குறுக்கே வந்தால் சகுனம்
சரியில்லை என்பார்கள் – அது என்ன?
-
=====================================================
விடைகள்:
1) கடிகாரம்
2) குயில்
3) பாகற்காய்
4) நுங்கு
5) பூனை

---------------------------------------------------------------------------------------------

1) பச்சை குடை அழகி, சமையலுக்கு வேண்டியவள்,
சற்றே ஆ என்று அலற வைப்பாள் – அது என்ன?
-
2) அன்று மலரும் பூ, அனைவரையும் கவரும் பூ,
கையில் எடுக்க முடியாத பூ. அது என்ன?
-
3) அழகான பூ, அருகில் ஆபத்து – அது என்ன?
-
4) அணையா விளக்கு. ஆனால் பகலிலும் எரி விளக்கு.
-அது என்ன?
-
5) தாளத்தோடு ராகத்தோடு கரை வழிப்பயணம் -
அது என்ன?

-
================================
விடைகள்:
-
1) பச்சை மிளகாய்

2) கோலம்

3) ரோஜா முள்

4) நிலா

5) கடல் அலை

---------------------------------------------------------------------------------------------


1) குதி குதியெனக் குதிக்கிறான், கெட்டைப்
பல்லால் சிரிக்கிறான் – அது என்ன?
-
2) குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
-
3) குட்டியும் போடும், குவலயத்திலும் பறக்கும் –
அது என்ன?
-
4) குட்டைப் பெண்ணுக்கு எட்டு முழச்சேலை –
அது என்ன?
-
5) குடுக்கை நிறைய வைரமணி – அது என்ன?
-
விடைகள்:
————–
1) சோளப்பொறி
2) அழுகை
3) வௌவால்
4) நீர் இறைக்கும் வாளி
5) மாதுளம் பழம்





1) குண்டு முழி ராசாவிற்கு குடலெல்லாம் பல். அது என்ன?
-
2) ஊசி நுழையாத கிணற்றில் ஒரு ஆழாக்கு தண்ணீர் – அது என்ன?
-
3) உயரப்பறக்கும். ஊன்றுகோலில் நிற்கும். அது என்ன?
-
4) நடைக்கு உவமை, நளனின் தூதுவன். அது என்ன?
-
5) மூடிய அரங்குக்குள் முத்துச்சிப்பிகள் – அது என்ன?
-
6) திரவமாகப் பிறந்தான். புகையாய் மறைந்தான். அது என்ன?
-
7) இருட்டு வீட்டில் முரட்டுச் சிப்பாய் – அது என்ன?
-
8) பகலில் துயிலுவான், இரவில் அலறுவான் – அது என்ன?
-
9) பாடத் தெரிந்தவனுக்கு ஆடத் தெரியாது. ஆடத்தெரிந்தவனுக்குப்
பாடத் தெரியாது. – அது என்ன?
-
10) பதுக்கி வைத்த முத்துக்கள் எங்கே, பவள வாய் திறந்து
பார்ப்போமா? – அது என்ன?
-
==============================

விடைகள்:

1) மாதுளம்பழம்
2) இளநீர்
3) கொடி
4) அன்னம்
5) வாய், பற்கள்
6) பெட்ரோல்
7) பூட்டு
8) ஆந்தை
9) மயில், குயில்
10) பற்கள்


--------------------------------------------------------------------------------------------



1)  அடித்தால் வலிக்கும், குழம்புக்கு ருசியாக இருக்கும் – அது என்ன?

2) தலைக்கு கவசம் வைத்திருப்பான், உரசினால் கூட திவசம்தான் -
அவன் யார்?
-
3) ஒலி கொடுத்து அழைத்து, உடனடி தகவல் தரும் – அது என்ன?
-
4) ஊசி முனையில் ஒய்யார சங்கீதம் – அது என்ன?
-
5) அவன் நகராதவன், ஆனாலும் அவன் வாய்க்குள் போட்டவை நகரும்-
அது என்ன?
-
===============================================
விடைகள்:

1) முருங்கைக்காய்
2) தீக்ககுச்சி
3) டெலிபோன்
4) இசைத்தட்டு
5) தபால்பெட்டி

--------------------------------------------------------------------------------------------

1) உடலோ வெள்ளை நிறம்,. உள்ளமோ தங்க நிறம் – அது என்ன?
-
3) சிவப்பு தொட்டியில் மலரும் பூ, சிடு சிடுத்தால் மறையும் பூ – அது என்ன?
-
3) என் உடம்பெல்லாம் முள். ஆனால் உள்ளமோ தேன் சுவை – நான் யார்?
-
4) மீன் பிடிக்க தெரியாது. ஆனால் வலை பின்னுவான் – அவன் யார்?
-
5) சுற்றிக் கொண்டேயிருப்பேன். ஆனால் எனக்கு தலை வலிக்காது – நான் யார்?
-
6) இரவு ராணி அவள். தினமும் விழித்திருப்பாள்.
மாதம் ஒரு முறை உறங்கிடுவாள் – அவள் யார்?
-
7) சட்டை மேல் சட்டையாய், பல சட்டை போட்டவன். சட்டைகளை
கழற்றிப் பபார்த்தால், உடம்பை மட்டும் காணோம் – அவன் யார்?
-
8) வீட்டிற்குள் இருப்பான். உலகத்தை காட்டுவான் – அவன் யார்?
-
9) சூரிய ஒளியில் உணவை சமைப்பேன். சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன் -
நான் யார்?
-
10) பல் துலக்க மாட்டான். ஆனால் இவன் பல் எப்பொழும் வெள்ளை
- இவன் யார்?



விடைகள்:
1) முட்டை
2) சிரிப்பு
3) பலாப்பழம்
4) சிலந்தி
5) காற்றாடி
6) நிலா
7) வெங்காயம்
8) கணினி, தொலைக்காட்சி
9) மரம்
10) வெள்ளைப் பூண்டு



1. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?



2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

4. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?

5. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

6. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?

7. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?

8. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?

9. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?

10. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?



விடுகதைகள் விடைகள்

1. மின்விசிறி

2. தொலைபேசி

3. நெருப்பு

4. சேவல்

5. சோளக்கதிர்

6. உப்பு

7. உளுந்து

8. ஈ

9. ஈசல்

10. எறும்பு



--------------------------------------------------------------------------------------

1. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?

2. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?

3. என்னுடைய நிறம் கருப்பு. மிகுந்த தேடலுக்குப் பின் நான் கிடைப்பேன். என்னை கண்டறிந்த பிறகு என்னுடைய கவசத்திடமிருந்து பிரித்தெடுப்பார்கள். நான் யார்?

4. நான் மயிலிறகைவிட மென்மையானவன். ஆனால் மனிதர்கள் அதிக நேரம் என்னை பிடித்து வைக்க முடியாது. நான் யார்?

5. எனக்கு உயிரில்லை. ஆனால் நான் வளர்வேன். எனக்கு நுரையீரல் கிடையாது. ஆனால் எனக்கு காற்று மிகவும் அவசியம். எனக்கு வாயில்லை ஆனால் பல கைகள் உண்டு. நான் யார்?

6. இருட்டறைக்குள் என்னை அழைத்துச் சென்று என்மேல் தீயை வைப்பார்கள். நான் அழுவேன். பிறகு என்னுடைய தலை துண்டிக்கப்படும். நான் யார்?

7. ஒரே இடத்தில் இருப்பேன். எனக்குத் தொண்டை கிடையாது. ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?

8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

9. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

10. இது பேசினால் கேட்கமுடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. ஆனால் இதனால் சுவாசிக்க முடியாது. அது என்ன?

விடைகள்:
1. துவாரம்
2. காற்று
3. நிலக்கரி
4. சுவாசம்
5. தீ
6. மெழுகுவர்த்தி
7. நீர்வீழ்ச்சி
8. தென்றல்
9. அமைதி
10. கோவில் மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக