ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டை பற்றி சிறப்பு 10 தகவல்கள்.


புத்தாண்டை பற்றி சிறப்பு 10  தகவல்கள்.

1. பன்டைய பாபிலோன் தான் 4000 வருடங்களுக்கு முன் கொண்டாடபட்ட உலகின் முதல் விடுமுறை தினமாம். ஜூலியஸ் சீஸர் 53 கிமு வில் தான் ஜூலியன் கேலன்டர் படி முதல் தினம் புத்தாண்டு தினம் என்று அறிவிக்கபட்டாலும் பின்பு அதை அரசு விடுமுறைதினமாய் அறிவித்த முதல் அரசு ரோமபுரி அரசுதான்.
2. ஜனவரி என்ற வார்த்தை - God Janus என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் கதவு என்பதாகும்.
3. 1582 ஆம் ஆண்டு கிரோகரியன் கேலன்டர் ஜனவரி 1 புத்தாண்டின் முதல் தேதியாகும் என்று அறிவித்த அன்றிலுருந்து தான் உலகம் முழுவது கிரோகிரியன் கேலன்டர் முறைப்படி ஆங்கில புத்தாண்டு கொண்டாடபடுகிறது
.
4. லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரத்தில் சரியாக 12 மணிக்கு மணி அடித்த உடன் ‘Auld Lang Syne’ = "the good old days",என்ற பாடலை மக்கள் குழுமி பாடுவது 1700 முதல் இன்று வரை வழக்கம். இதை ராபர்ட் பர்ன்ஸ் என்பவர் எழுதினார். இந்த பாட்டின் அர்த்தம் - பழைய நண்பர்கள் பழைய நாட்கள் குறித்து நியாபகபடுத்தி பாடுவதாகும்.
5. புத்தாண்டு சபதம் - New Year resolution முதன் முதலில் ஒரு சம்பிரதாயமாக கொண்டு வந்தது பாபிலோனியர்கள் தான். அதிகமாய் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும் சபதம் - நான் இந்த வருடம் கண்டிப்பாய் உடம்பை குறைத்து சிக்குனு இருக்கனும்ங்கிறது தான் ஆனால் எத்தனை நாளுக்கு அது வேலிட் என்று தெரியாது.
6. ஸ்பானிஸ் வழக்கபடி பன்னிரென்டு திராட்சைகளை சாப்பிடுவது வழக்கம். இதன் மூலம் பன்னிரென்டு மாதங்களும் நன்கு அமையும் என்று ஒரு நம்பிக்கை.
7. டென்மார்க்கில் உள்ள டானிஷ் வகையினர் தன் வீட்டுக்கு முன்னாடி சாப்பிடும் தட்டுகளை வைத்து உடைத்தெறிவார்கள். உடைந்த இந்த குப்பைகள் வீட்டு வாசலில் இருப்பது அவர்கள் நம்புவது ஒரு வகை.
8. தீபாவளி போல் புத்தாண்டு அன்று வெடி வெடிப்பது இருள் விலகி ஒளி நிறைந்த புத்தாண்டாய் மாறும் என்ற நம்பிக்கை பல நூறு வருடங்களுக்கு முன்பே இருந்ததாகும்.
9. ரோமானியர்கள் தன் நண்பர்களுக்கு மரகன்றுகள் செடி கொடிகளை கொடுப்பது ஒரு ஐதீகம்.
10. இத்தாலியில் எல்லோரும் புத்தாண்டு பிறப்பன்று சிவப்பு வகை உள்ளாடைகளை அணிவர்.
கொசுறாக - The tiny island of Kiribati என்ற சமோவா (கிரிபாட்டி) தீவுதான் உலகத்தில் முதலில் 2014 கவுன்ட் டவுனை கொண்டாடுவார்கள். அதே சமயம் அமெரிக்காவின் சமோவா பாகோ பாகோ American Samoa - Pago Pago தான் கடைசியாக புத்தாண்டை கொண்டாடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக