வியாழன், 21 டிசம்பர், 2017

முக அழகு குறிப்புகள் மருத்துவ டிப்ஸ்


முக அழகு குறிப்புகள் மருத்துவ டிப்ஸ்
அழகுக்குறிப்பு

வரண்ட சருமத்திற்க்கு தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில், ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!

சுருக்கங்களை போக்க முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.

வழ வழ முகத்திற்க்கு பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ப்ரகாசமான முகத்திற்க்கு ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர, பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!

முக்கியமான அழகுக்குறிப்பு எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!! அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!

முக பருவை போக்க.. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் இதை தடுக்க... 1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும். பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும். எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும். பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்

முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும். அதனால் இமைகள் அடர்தியாக உள்ளது. செய்து பாருங்கள்! பலன் பெருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக