சனி, 16 டிசம்பர், 2017

முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். ..


முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். ..

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர்.

 அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

1 ருத்ர முஹுர்த்தம் 06.00 AM – 06.48 AM

2 ஆஹி முஹுர்த்தம் 06.48 AM – 07.36 AM

3 மித்ர முஹுர்த்தம் 07.36 AM – 08.24 AM

4 பித்ரு முஹுர்த்தம் 08.24 AM – 09.12 AM

5 வசு முஹுர்த்தம் 09.12 AM – 10.00 AM

6 வராஹ முஹுர்த்தம் 10.00 AM – 10.48 AM

7 விச்வேதேவா முஹுர்த்தம் 10.48 AM – 11.36 AM

8 விதி முஹுர்த்தம் 11.36 AM – 12.24 PM

9 சுதாமுகீ முஹுர்த்தம் 12.24 PM – 01.12 PM

10 புருஹூத முஹுர்த்தம் 01.12 PM – 02.00 PM

11 வாஹிநீ முஹுர்த்தம் 02.00 PM – 02.48 PM

12 நக்தனகரா முஹுர்த்தம் 02.48 PM – 03.36 PM

13 வருண முஹுர்த்தம் 03.36 PM – 04.24 PM

14 ஆர்யமன் முஹுர்த்தம் 04.24 PM – 05.12 PM

15 பக முஹுர்த்தம் 05.12 PM – 06.00 PM

16 கிரீச முஹுர்த்தம் 06.00 PM – 06.48 PM

17 அஜபாத முஹுர்த்தம் 06.48 PM – 07.36 PM

18 அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36 PM – 08.24 PM

19 புஷ்ய முஹுர்த்தம் 08.24 PM – 09.12 PM

20 அச்விநீ முஹுர்த்தம் 09.12 PM – 10.00 PM

21 யம முஹுர்த்தம் 10.00 PM – 10.48 PM

22 அக்னி முஹுர்த்தம் 10.48 PM – 11.36 PM

23 விதாத்ரு முஹுர்த்தம் 11.36 PM – 12.24 AM

24 கண்ட முஹுர்த்தம் 12.24 AM – 01.12 AM

25 அதிதி முஹுர்த்தம் 01.12 AM – 02.00 AM

26 ஜீவ/அம்ருத முஹுர்த்தம் 02.00 AM – 02.48 AM

27 விஷ்ணு முஹுர்த்தம் 02.48 AM – 03.36 AM 28

28. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் 03.36 AM – 04.24 AM

29. பிரம்ம முஹுர்த்தம் 04.24 AM – 05.12 AM

30. சமுத்ரம் முஹுர்த்தம் 05.12 AM – 06.00 AM

ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும்.

 பகல் பொழுது உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்க்ஷிணாயணம் என்றும் சொல்வார்கள்.

 உத்தராயணம் தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு உஷத் காலம்.

இறைவனை எண்ணி தியானம், ஜபம் செய்ய தேவர்களின் உஷத் காலமான மார்கழி மாதம்தான் மிகவும் உயர்ந்தது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

 மார்கழி மாத தொடக்கத்தில்தான் பாரதப் போர் தொடங்கியது.

 இந்தப் போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்ததும் மார்கழி மாதமே!

 பாரதப் போர் முடிவடையும் சமயம் பிதாமகர் பீஷ்மர், அம்புப் படுக்கையில் சயனித்திருந்த பொழுது அவர் உச்சரித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம்.

விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்த தும் மார்கழி மாதமே!

 பகவான் நாமம் ஒன்றே கலியுகத்தில் பக்தி மார்க்கத்திற்கு வழி என்று பகவானனே பீஷ்மர் வாயிலாக சகஸ்ரநாமத்தை அருளினார்.

 வைணவத் திருத்தலங்களில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருநாள், மார்கழி மாதத்தில்தான் வருகிறது.

 நடராஜப் பெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை.

 மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

மார்கழி மாதத்தின் மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீஅனுமத் ஜெயந்தி.

மார்கழி மாதம் அமாவாசைஅன்று, மூலம் நட்சத்திரத்தில் வாயு மைந்தன் ஆஞ்சநேயன் பிறந்தார். இதுவும் மார்கழி மாதத்தின் சிறப்பு.

கோதை நாச்சியார் எனப்படும் ஸ்ரீ ஆண்டாள் கண்ணபிரானை குறித்து திருப்பாவை நோன்பிருந்ததும் 30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவை எனும் பாடலை நமக்கு அருளியதும் மார்கழியில் தான்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழியில் நாமும் பிரம்ம முகூர்த்த காலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களின் அருளை பெருவோமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக