திங்கள், 4 செப்டம்பர், 2017

சிறுவணிக வெற்றிக்கு சில விதிகள்:



சிறுவணிக வெற்றிக்கு சில விதிகள்:

ஒவ்வொருநாளும் புதிய புதிய வணிக முயற்சிகள் உருவாக்கப்படுகின்றது. இவற்றுள் சில வெற்றிப் பெறுகின்றன, பல தோல்விகளைத் தழுவுகின்றன. உங்களுடைய வியாபாரம் விருத்தியடையுமா? அல்லது ஆயிரக்கணக்கான நலிவடைந்துப்போன வர்த்தங்களின் பட்டியலில் இணைந்து கொள்ளுமா? உங்களுடைய வணிகத்தை விருத்திச் செய்யவும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்குமான பத்து வழிகள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. தகுந்த சூழ்நிலையைக் கண்டுப்பிடித்தல்:

ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களை குறிப்பிட்ட மக்கள் மத்தியில் கொண்டு சென்று விற்பனை செய்ய உகந்த வாய்ப்புக்களைக் கண்டு செயற்படுதல் சிறு வர்த்தகத் தொழிலுக்கு மிகச் சிறந்ததாகும். வரையறையுள்ள அதாவது குறைந்த வளங்களைக் கொண்ட ஒரு சிறிய நிறுவனமொன்றால் திறமையாகக் கையாள முடியும். உங்களுடைய  முயற்சிகளை ஒரு குறுகிய சந்தை வழங்கலின் மீது கவனம் செலுத்துதல் மூலம்,  உங்களை இதில் திளைக்கச் செய்து, எது சிறந்தது என்று தீர்மானிக்க கூடிய ஒரு வல்லுனராக உருவாக்கும். எல்லாம் நல்லதாக இருக்கும் என்பது சாத்தியம் இல்லை என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உங்கள் கவனத்தை இக்குறுகியச் சந்தை வாய்ப்புக்களுக்கு செலுத்துவதன் மூலம் இத் தொழிலிலுள்ள பெரிய போட்டியாளர்களின் தலையீடுகளைக் குறைக்கலாம். நீங்கள் மரத் தளபாடத்திலிருந்து வர்ண தீந்தை வரை எல்லாவற்ரையும் விற்பனைச் செய்கின்ற ஒரு வன்பொருள் வியாபாரம்(hardware store) செய்பவராக இருந்தால், இது ஹோம் டிப்போட் (Home Depot) போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பான ஒரு சில்லறை வியாபாரத்தின் நுழைவாகவே இருக்கும், எனவே காலப்போக்கில் இது அழிந்து போய்விடும். ஆகவே உங்கள் வியாபாரத்தில் ஒரு வரையறையினைக் கொண்டு வர முயலுங்கள். எடுத்துக் காட்டாக, வீட்டுக் கட்டுமானத்தில் முகப்பலங்கார பொருட்களின் விற்பனை போன்ற நடவடிக்கை இந்தப் பிரிவில் சிறந்த விற்பனர் ஆக்கவல்லது.

2. சிறிதாய் இருத்தல், இன்னும் பெரிதாய் சிந்தித்தல்:

"எவ்வாறு நான் என்னுடைய தொழிலில் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியும்?" என்பது தான் ஒரு பொதுவான வினாவாக சிறுவர்த்தகத் தொழியலைத் தொடங்குபவரிடையேக் காணப்படுகிறது. நெகிழ்வுத்தன்மை, விரைந்து பதிலளிக்கின்ற திறன், ஒரு தனிப்பட்ட சேவையை வழங்குகின்ற ஆற்றல் உள்ளிட்ட பல உள்ளார்ந்த நன்மைகளை சிறு வணிகங்கள் பெரிய நிறுவனங்களைக்காட்டிலும் வைத்திருக்கின்றன. சிறிய நிறுவனங்களின் பலத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அப்படிப்பட்ட நன்மைகளை அதிகம் வழங்குகின்ற நிறுவனமாக உங்களது நிறுவனத்தை நிச்சயப்படுத்திக் கொள்வது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உகந்த்தாகும்.

3. உங்களுடையத் தயாரிப்புக்களை வேறுபடுத்திக் காட்டுதல்:

உங்களுடைய உற்பத்திகளும் சேவைகளும் உங்களது வாடிக்கையாளர்களதுப் பிரச்சனைக்கு தனித்துவமான தீர்வுகளாக அமையக் கூடிய பல நன்மைகளை வழங்குகின்றது என்பதனைத் தெரியப்படுத்துங்கள். மற்றவர்களைப் பிரதி செய்து நடத்தும் வணிகங்கள் சந்தையில் வெற்றிப் பெற்றது அரிது. எனவே சந்தைவாய்ப்புக்களை தெரிந்து கொண்டு உங்களது போட்டியாளர்களைப் பிரதி செய்யாது உங்கள் உற்பத்திகளில் (products), பொதியில் (package) தனித் தன்மைகளைக் காண்பியுங்கள்.

4. முதல் அபிப்பிராயக் கணிப்பீடு- First impression counts:

முதல் பார்வையில் நல்ல அபிபிராயத்தைப் பெறுவதைத் தவிர்த்து இரண்டாவதுச் சந்தர்ப்பத்தை நாடுவது உகந்தது அல்ல. எனவே முதல் சுற்றிலேயே துல்லியம் மற்றும் தரம் என்பனவற்றுக்காகப் போராட வேண்டும். இதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட களஞ்சியம், நற்பண்புள்ள ஊழியர்கள், மற்றும் தொலைபேசியில் வாடிக்கையாளர்களுடன் இனிமையாகவும், தன்மையாகவும் உரையாடுதல் போன்ற விடயங்கள ஏற்படுத்துதல் வேண்டும். நீங்கள் ஒரு தனிப்பட்ட வியாபாரத்தை வீட்டை அலுவலகமாகக் கொண்டு செயல்படுபவராக இருந்தால், நீங்கள் தான் வியாபாரதினதும் சந்தைப்படுத்தல் முயற்சியினதும் செயற்படு மையம் என்பதனை நினைவில் நிறுத்த வேண்டும். நீங்கள் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு மிகவும் முக்கியமான வாடிக்கையாளராகவோ அல்லது மற்றைய வாடிக்கையாளருக்கு ஒரு பரிந்துரை செய்யக்கூடியவராகவோ இருப்பர். எனவே நீங்கள் அவர்களை தனிப்பட்ட நபராகவும்,  உங்களால் வழங்கப்படுகின்ற குறிப்பிட்ட சேவை அல்லது பொருள் பற்றிய  திறமை கொண்டவர் என்ற அடிப்படையிலும் கவரப்படல் வேண்டும். இதற்காக நீங்கள் எப்போதும் உங்களை தொழில் வழியில் கண்ணியமான தோற்றமுடையவராகவும், தொழில் பற்றிய அறிவு கொண்டவர் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

5. நன் மதிப்பு:

உங்கள் வியாபாரம் அதன் நற்பெயருடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது. உங்களது பொருட்கள் மற்றும் ஆதரவானச் சேவையின் தரத்திற்காக நன் மதிப்பைக் கட்டியெழுப்புவது என்பது அவசரமானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். உயர் தரமான பொருட்கள் மற்றும் சிறந்த சேவை என்ற இரண்டு விடயஙகள் உறுதியான வெற்றிக்குரியவை என்பதை ஞாபகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுஙகள். உங்கள் நோக்கம் எப்போதும் தரத்திற்கானதாகவே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வரி ஆலோசகராக இருந்தால், உங்கள் வாடிக்கையாளருக்கு வரி மீள்பெறல் கிடைப்பதற்காக முற்றிலும் துல்லியமாகத் தயாரிப்பதற்குப் பாடுபடல் வேண்டும்.

6. நிலையான முன்னேற்றம்:

தொழில் முனைவோர் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகள் வளர்ச்சி வேட்கையின் சிந்தனை வீச்சுக்கு எல்லை இருக்கக் கூடாது என்பது  தெரியும். துரிதகெதியில் வளர்ந்து வரும் போட்டி யுகத்தில்,'இதைத் தான் நாம் எப்போதும் செய்கிறேன்" என்ற எண்ணத்தைப் பற்றிப் பிடித்து இருத்தல் உங்களுக்கு ஆபத்தானதாக இருக்கும். துரிதமான புதிய தீர்வுகளை நீங்கள் கொண்டு வரவேண்டிய தேவை இன்றைய வர்த்திகச் சூழலில் உங்களது கேள்வியை அதிகரிக்கும்.

7. வாடிக்கையாளருக்கு செவிமடுத்தல்:

எப்போதும் நீங்கள் சந்தையின் உந்தும் சக்தியாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களே உங்கள் வியாபாரத்திற்கு முக்கியமானவர்கள்,அவர்களின் தேவைகளைச் செவிமடுத்து, அதனைப் பூர்த்தி செய்ய செயற்படுங்கள்.  அவர்களுக்கு நீங்கள் முக்கியமானவர்கள் என்பதனை உணர்த்த  வேண்டும். நீங்கள் வாடிக்கையாளார்கள் மீது கவனம் செலுத்தி நம்பிக்கையைப் பெறும் போது, அவர்கள் உங்களை மற்றவர்களுக்குப்  பரிந்துரை செய்வது மட்டுமல்லாது உங்களுக்கு விசுவாசமானவர்களாகவும் இருப்பார்கள். தனிப்பட்ட நபர்களின் வார்த்தைப் பரிந்துரைகள் உங்கள் வணிகத்திற்கான குறைந்த செலவுள்ள வினைத்திறனான ஒரு சந்தைப்படுத்தல் தந்திரோபாயம் என்பதனை மறந்துவிட வேண்டாம்.

8. வெற்றிக்கானத் திட்டமிடல்:

தொழில் முனைவோர் முதலில் திட்டமிடலால் ஏற்படுகின்ற பலாபலங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தப்படும் உங்கள் வியாபார நடவடிக்கை வளர்ச்சிப் பாதையில் செல்லவதுடன், உங்கள் வியாபாரத்தினது கருப்பொருளை விளங்கிக் கொள்ளவும், உத்தேசச் செலவீனத்தை வரையறை செய்ய, விற்பனையின் போக்கை எதிர்வு கூற, மற்றும் வரும் ஆபத்துக்களை இனங்கண்டு கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு உதவும் என்பதில்  ஐயப்பாடுல்லை. திட்டமிட்டு செயற்படுதல் வியாபார நடவடிக்கைகளில் எங்கே நீங்கள் நிற்கின்றீர்கள் என்பதையும், அவ்விடத்தை எவ்வாறு அடைந்தீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லும். இதைவிடுத்து தான்தோன்றி தனமான செயல்கள் கண்களைகட்டி காட்டில் பயணிப்பது போன்றதாகும்.

9. புதுமையானதாக இருத்தல்:

மாற்றமடைந்துவருகின் ற தொழில் நுட்பத்திற்கு ஏற்ப புதிய விடயங்களை வர்த்தக நடவடிக்கைகளில் உட்புகுத்தி, உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் மதிப்பின்  மேம்பாட்ல்டுக்கும் பயன்படுத்த வேண்டும்.  இம் மாதிரியான புதுமைகளை விலையிடல், வாடிக்கையாளர் சேவை, விநியோக நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களில் காண்பிக்கலாம். எனவே, புதியவைகளை உள்வாங்க என்றும் விழிப்புடன் இருந்து உங்கள் தயாரிப்புக்களின் தரத்தினையும் வினைத்திறனான வர்த்தக நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்கு பாடுபடுதல் வேண்டும்.

10. புத்திச்சாதுரியமாக வேலை செய்தல்:

நீங்கள் ஒரு தொழில் முனைவோராக இருந்தால், உங்களிடத்தில் சுயநம்பிக்கையை வைத்திருப்பதுடன் புதிய எண்ணக் கருக்களை உருவாக்குவதில் என்றும் முனைப்புள்ள உணர்வினைக் கொண்டிருத்தல் வேண்டும். தனிநபர்களின் வெற்றி என்பது அவர்களின் தொழில் தொடர்பான தூரநோக்கு பார்வை, அது தொடர்பான விடயங்களை ஏற்று நடத்துவதில் அமைந்துள்ளது என பல ஆய்வுகள் எடுத்தியப்புகின்றன. அவர்கள் ஒய்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து எவ்வாறு தங்கள் நேரத்தை அதற்கும் வேலைக்கும் வினைத்திறனாக பயன்படுத்த்துகின்றார்கள். தங்கள் திட்டம் சரிவர வேலை செய்யாத  இடத்து அதனை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார்கள். அடுத்தது அவர்களின் முக்கியமான விடயம் என்னவென்றால் தங்களது பலவீனமான இயல்புகளை இனங்கண்டு அதனை பலமானதாக்குவதற்காக திறமைகளை வளர்த்து வர்த்தக நடவிடிக்கைகளில் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி காண்பர். புத்திச்சாதுரியமாக வேலை செய்வது என்பது எத்தனை எண்ணிக்கையில் செய்வது என்பதல்ல எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்று இவ்வகை தொழில் நடத்துனர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக