திங்கள், 25 செப்டம்பர், 2017

உங்கள் வீட்டுப்பெண்மணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?



உங்கள் வீட்டுப்பெண்மணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

*பெண்களே உஷார்,!*

👧 தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமாணத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையாக திகழும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

👧 இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது, நம் ஊரில் இந்த கொடுமைகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. இனியும் நாம், எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது முற்றிலும் தவறு.

👧 உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

👧 செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

👧 வீட்டிற்கு புதிதாக வரும் நபரின் மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து நாம் அகல கூடாது. ஏனெனில் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் முன், அவர்கள் நம்மை தாக்க நேரிடலாம். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

👧 இரவில் உங்களை யாராவது துரத்தினால் ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள். அல்லது, ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள். அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பதன் மூலமும், கேமராவும் இருப்பதன் மூலமும் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது தப்பித்துக்கொள்ளலாம்.

*பாலியல் வன்முறையை எதிர்கொள்ள:*

👧 உடனடியாக செல்போனில் குடும்பத்தினருக்கோ அல்லது போலீசுக்கோ தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

👧 உங்களிடம் இருக்கும் சேப்டிபின், கொண்டை ஊசி, குடை, கத்தி, பேனா, நகங்கள், பற்கள் போன்றவற்றை பயன்படுத்தி எதிர்தரப்பினரை காயபடுத்தி தப்பிக்கலாம்.

👧 உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

👧 எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனின் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

*பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுவது யாரால்?*

இந்த கேள்விக்கு அலசி ஆராய்ந்து கிடைத்த பதில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே. குடும்ப நபர்களைத் தவிர மற்ற எவரும் நம்மை எந்த நோக்கத்திற்காக பழகுகிறார்கள் என்று முற்றிலும் நம்மால் உணர முடியாது. அதை முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியம். எனவே, அரைகுறை ஆடை, சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றில் படங்கள் பதிவிடுதல், தேவையற்ற அரட்டை, தேவையற்ற வீடியோ பதிவு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

*பாரதி கண்ட புதுமை*
*பெண்களா நீங்கள்?*

இந்த சந்தேக கேள்விக்கு சரியான பதில். ஆம். ஆனால், தற்காப்பில் தலைகுனிந்து இருக்கிறது பெண்களின் நிலைமை. இதனை தவிர்க்க, சமூகத்தில் ஒரு நல்ல படிப்புடன் வேலை, ஒரு குடும்பத்தை நிர்வகித்து வழிநடத்தும் பொறுப்பு, எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டி முன்னோடியாக திகழ்வது போன்ற எண்ணற்ற பொறுப்புகள் காலடியில் இருக்கிறது என்பதை மறந்து அற்ப மனிதர்களின் பொழுது போக்கிற்கு போதை பொருளாக மாறக் கூடாது என்பதை கனவிலும் மறவாமல் செயல்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக