புதன், 4 ஜனவரி, 2017

சிரிக்கலாம் ...வாங்க

சிரிக்கலாம் ...வாங்க  ....

உலகில் பல மர்ம்மான பிரதேசங்கள் உள்ளன.
கடந்த 2016ம் வருடத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட சில
மர்ம்ப் பிரதேசங்களின் பட்டியல் இது..!

1. நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்
- இங்கு யாராவது கொலை செய்யப் பட்டால் அவரைக் காப்பாற்றுவதும்,
அவரைக் கொன்றவரைக் கண்டுபிடிப்பதும் இயலாத காரியம்.
( வேடிக்கை பார்க்கும் மக்கள், பிணத்தை நெருங்காத போலீஸ் துறை என எல்லா விசித்திர மர்மங்களையும்
இங்கு காணலாம்)

2. கண்டெயினர் லாரிகள்
- தமிழ்நாட்டுக்குள் ஓடும் கண்டெயினர் லாரிகளில் என்ன உள்ளன என்பது
கண்டுபிடிக்கப்பட முடியாத மர்ம்ம்
. சமயத்தில் 570 கோடி பணம் கிடைக்கலாம் ஆனால், அது யாருடைய பணம் என கண்டுபிடிக்கவே
முடியாது.

3. புழல் சிறை

- இது அபாயகரமான மர்ம்மான சிறை.
குவாண்டனாமோ சிறையை விட மர்ம்ம் நிறைந்த சிறை..!!
இங்கு கைதிகளுக்கு நொறுக்குத்தீனியாக கடித்துக்கொள்ள
மின்சார ஒயர்கள் அங்கங்கு தொங்கிக் கொண்டிருக்கும்..!!

( ஆத்தாடி..!! டெர்ரால்ல இருக்கு..!!??.)

#சிரிக்கலாம்வாங்க

4. சேலம் டூ விருத்தாச்சலம் ரயில் பாதை.

- இந்த ரயில் பாதைதான் உலகிலேயே
மர்ம்மான பிரதேசம்..
இங்கு ரயில் கூரையை ஓட்டையைப்போட்டு கட்டுக்கட்டாக
பணத்தை ஆட்டையைப் போடுபவர்களை , சிஐஏ,மொசாட் உளவுப் படைகள் வந்தால் கூட கண்டே
பிடிக்க முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..!!

( தொடரி படத்துல 140 கிமீ ஸ்பீடுல
கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் காத்துல
பறக்கலைனு கேள்வி கேட்ட ' லாஜிக்கல்' அறிவு ஜீவிகளே..??.!!

இந்த ரயில் பாதைல 100 கிமீ ஸ்பீடுல
ரயில் கூரையை எப்படி ஓட்டை போட முடியும்னு உங்களால பல்லு மேல நாக்கைப் போட்டு கேள்வி கேட்க
முடியுமா???..)

5.பதான்கோட் விமான தளம்
- இங்கு கேண்டீன் வரைக்கும் தீவிரவாதிகள் வந்து ஹாயா டீ குடிச்சுட்டு ராணுவ வீர்ர்களை சுடுவாங்க..!! கழுத்தறுபட்ட அதிகாரிகள் எல்லாம் பிழைச்சுவந்து
வாக்குமூலம் குடுக்குமளவுக்கு
' மர்ம தேசம்'..

6. அப்போலோ ஹாஸ்பிடல்.

-  இங்கு சேர்க்கப்படும் நோயாளிகள்
எழுந்து காபி, டீ, உணவு சாப்பிடலாம்,
நடைபயிற்சி செய்யலாம், ஏன்..
கையெழுத்து போட பயிற்சி எடுக்கலாம்..ஆனால், உயிரோடு
மட்டும் வெளியே வர முடியுமா என்பது
வரை மர்ம்மான பிரதேசம்..!!

#சிரிக்கலாம்வாங்க

7. அதிமுக பொதுக்குழு அரங்கம்.

- இங்கு தான் திடீர் ' சின்னம்மா' க்கள்
தலைமைக்கு வரக்கூடிய மர்ம பிரதேசம். கட்சி விதிகள், சட்ட திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் எல்லாம் ' மாயமாய்' மறைந்து விடும்..!!

8. தமிழ்நாடு போலீஸ் ' லென்ஸ்' பேக்டரி.

- இங்கு தயாரிக்கப்படும் ' லென்ஸ்' வழியாக பார்த்தால் சாதாரண குற்றவாளிகள் கூட ஈஸியாகத் தெரிவாங்க..!! ஆனால், யுவராஜ் ,வேந்தர் மூவீஸ் மதன் போன்ற
ஸ்பெஷலான ஆட்கள் அவ்வளவு
சீக்கிரம் தெரியவே மாட்டாங்க..!!
ஏகப்பட்ட போராட்டங்களுக்குப்பின்புதான்  கண்ணிலே காட்டக்கூடிய அற்புத '
லென்ஸ்' உருவாகும் மர்ம்மான இடம்..!!

9.பழசுக்கு புதுசு ' டீலிங்.
- இது இடமல்ல..!! ஒரு வகையான
' மாய வித்தை' , இது இந்தியா முழுக்க
பல இடங்களில் திடீர் திடீர் என
ஏற்படும்..!! அது என்னன்னா,
நாம கால் கடுக்க ஏடிஎம்மில் நின்றாலும் நமக்கு ஒத்தை 2000 ருவா
நோட்டு வர்றது அபூர்வம்..

ஆனா, இந்த பழசுக்கு புதுசு டீலிங் மாய வித்தை நடந்த இடங்களில் ரெய்டு பண்ணினா கட்டுக்கட்டாக 2000 ருவா
நோட்டுகளும், பழைய 500, 1000 ருவா நோட்டுகளும் கிடைக்கும்
' அதிசயம்' நிறைஞ்ச மர்ம்மான வித்தை..!!

10. அம்பானி& கோ

- இந்த இடத்துக்கு போன கவர்மெண்டோட எல்லா விசயமும்
கிடைக்கும்னா பாருங்களேன்..!!
பிக் பசார்னு ஒரு இடத்துக்கு போன
புது செல்லுகிற நோட்டு கிடைக்கும்.
நீங்க  கல்விக்கடன் வாங்குனீங்கன்னா,
இந்த இடத்துல இருந்து நோட்டீஸ் வரும்..!! இலவசமா 4g சிம் கார்டு
வரும்...!!
அவ்வளவு ஏன்..பிரதமரே இங்கு
வந்து உங்களுக்கு சிம் கார்டு தர
விளம்பரம் பண்ணுவார்னா பார்த்துக்கங்க...!!
அந்தளவுக்கு ' வினோதமான '
மர்ம்மான இடம்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக