வியாழன், 26 ஜனவரி, 2017

குடியரசு தினமும் சட்ட மாமேதை அம்பேதகாரும்...

குடியரசு தினமும் சட்ட மாமேதை அம்பேதகாரும்...

புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற
தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம்…!!!

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் அம்பேத்கர் அவர்களின் உழைப்பு மகத்தானது… இன்னொரு மனிதனால் முடியாதது....

1947 ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது....

திரு.கோபால்சாமி ஐயங்கார், திரு.அல்லாடி கிருஷ்ணமூர்த்தி திரு.கே.எம்.முன்ஷி, திரு.சையது முகமது சாதுல்லா, திரு.மாதவராவ், திரு.டி.பி.கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இதில் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டார். ஒருவர் இறந்துபோயுள்ளார். பிறர் அம்பேத்கருக்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. அம்பேத்கர் என்கிற அந்த ஒற்றை மனிதன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து 6 மாதத்தில் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம். இந்த 6 மாதத்தில் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, தென் அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக, வரிக்கு வரி படித்து, உள்வாங்கி, மனதில் அதனை அசைப்போட்டு, சிந்தித்து நமது இந்திய நாட்டிற்கு பொருத்தமான, தேவையான சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை எழுதியுள்ளார். இதற்காக அவர் எடுத்துக்கொண்டது வெறும் 6 மாதங்கள்தான். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இப்போது இருப்பதை போன்று கணிணி தட்டச்சு கிடையாது, நகல் கிடையாது, இணையம் கிடையாது, மின் வசதி அதிகமிருந்திருக்காது, தொலைத்தொடர்பும் விரைவில் கிடைக்காது ஆனாலும் இந்தியா போன்ற மிகப்பெரிய, பல்வேறு சிக்கல்கள், வேறுபாடுகள் உடைய நாட்டிற்கு, அனைத்து மக்களுக்கும் நலம் பயக்கின்ற, உரிமைகளைப் பாதுகாக்கின்ற வகையில் ஒரு அரசியலமைப்பு சட்டத்தை பக்கம் பக்கமாக எழுதுவது என்றால்…. அம்பேத்காரைத் தவிர வேறு எவராலும் முடியாத ஒன்று.
அனைத்து குடிமக்களும் சமூக, பொருளாதார, அரசியலில் நீதி.. எண்ணத்தில், வெளிப்படுத்தலில், நம்பிக்கையில், வழிபடுதலில் சுதந்திரம்..
தகுதி, வாய்ப்புரிமையிலும் சமநிலை பெறவும், அதை மேம்படுத்தவும்... தனி நபர் மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம்.. பெற்றிட உறுதி செய்யும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி புரட்சியாளா் டாக்டா் அம்பேத்கா் அவா்களை...
“சேரிகளின் கம்பி வலைக்குள் வைத்திருக்கும் அவலநிலை இந்த சமூகத்திற்கான மிகப்பெரிய இழுக்கே ஆகும்”.
“ குடியாட்சி அமைய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி தந்த அண்ணல் அம்பேத்காின் திரு உருவத்தை குடியரசு தின விழாவில் நமது தேசியக் கொடியோடு சேர்த்து ( சாதிய பாகுபாடு இன்றி ) நெஞ்சில் தாங்குவதே இம்மண்ணில் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையாகும்...

இது சாதியத்திற்கான பதிவு அல்ல...
சமத்துவ சமூகத்திற்கான பதிவு...

#ஜெய்பீம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக