வியாழன், 26 ஜனவரி, 2017

சனவரி 26, குடியரசு தினம் .. அம்பேத்கர் தினமே!

சனவரி 26, குடியரசு தினம் ..
அம்பேத்கர் தினமே!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஏறக்குறைய இருநாறு ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷாரின் ஆட்சிக்குள் அடங்கி கிடந்த இந்திய துணைக் கண்டம் 1947 ஆகஸ்ட் 15ல் விடுதலை பெற்றது.ஆட்சியாளர்கள் மாறினாலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட1858 இந்திய சட்டமே சில மாற்றங்களுடன் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் தொடர்ந்தது. அந்த அந்நிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைச்சட்டங்களை அப்புறப்படுத்தி விட்டு புரட்சியாளர் அம்பேத்கர் வரைவு செய்த இந்திய அரசியல் சாசனம் அரசியல் நிர்ணய சபையால் 1949 நவம்பர்26ல் ஏற்கப்பட்டு 1950 சனவரி26ல் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆக அந்த நாளில் நமது அரசியல் சாசனத்தந்தை புரட்சியாளர் அம்பேத்கரை நினைவு கூர்ந்து அவர் இந்திய குடிமக்களாகிய நமக்களித்த மானுட சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற உயர்ந்த மதிப்பீடுகளை பாதுகாக்க உறுதியேற்பது தான் பொருத்தமானதாகும்..
தீவிர இந்துவாக இருந்த போதும் மதச்சார்பினமையை கடைபிடித்த காரணத்தால் காந்தி கொலை செய்யப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோவில்  கட்டி மதவெறியை கொண்டாடுமளவு மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்நிலையில் குடியரசு தினத்தை அம்பேத்கர் தினமாக கொண்டாடுவது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. சாதிய மதவெறி சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டிய ஒடுக்கப் பட்ட மக்களின் போராட்ட வழிமுறையும், வடிவமும் ஆகும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக