2017ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணை
2017ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள போட்டிகளின் முழு அட்டவணை:
போட்டி இடம் தேதி
(இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் தொடர்)
முதல் போட்டி புனே ஜனவரி 15
2வது போட்டி கட்டாக் ஜனவரி 19
3வது போட்டி கொல்கத்தா ஜனவரி 22
(இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர்)
முதல் போட்டி கான்பூர் ஜனவரி 26
2வது போட்டி நாக்பூர் ஜனவரி 29
3வது போட்டி பெங்களூரு பிப்ரவரி 1
(வங்கதேசத்துடன் ஒரே ஒரு டெஸ்ட்)
டெஸ்ட் போட்டி ஐதராபாத் பிப்ரவரி 8-12
(இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்)
முதல் டெஸ்ட் புனே பிப்ரவரி 23-27
2வது டெஸ்ட் பெங்களூரு மார்ச் 8-12
3வது டெஸ்ட் ராஞ்சி மார்ச் 16-20
4வது டெஸ்ட் தர்மசாலா மார்ச் 25-29
(ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி-இங்கிலாந்து)
இந்தியா-பாகிஸ்தான் எட்ஜ்பாஸ்டன் ஜுன் 4
இந்தியா-இலங்கை ஓவல் ஜுன் 8
இந்தியா-தென் ஆப்ரிக்கா ஓவல் ஜுன் 11
இதன்பின் ஜுலை மாதத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னர் ஜுலை-செப்டம்பர் மாதங்களில், இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒரு நாள், ஒரு டி20 போட்டி கொண்ட தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.
இந்த தொடர் இலங்கையில் நடைபெறுகிறது. இதற்கான தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதன்பின் அக்டோபர் மாதத்தில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த ஆண்டில் கடைசியாக தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 4 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற் கிறது.
நவம்பர் மாதம் தொடங்கும் இந்த தொடர், அடுத்தாண்டு ஜனவரி வரை நடைபெறுகிறது.
இந்த தொடர்களுக்கான அதிகாரப்பூர்வ தேதி, இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக