வெள்ளி, 6 ஜனவரி, 2017

ஜனவரி 15, பிப்ரவரி 19ம்தேதிகளில் நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5, ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..

POLIO DROPS ON MARCH 5 /APRIL 2

ஜனவரி 15, பிப்ரவரி 19ம்தேதிகளில் நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5, ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்...

தமிழகத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக இரட்டை தடுப்பூசி மருந்து 9 மாதம் முடிந்த 15 வயதிற்குட்பட்ட 1.7 கோடி குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் 6ம்தேதி முதல் 28ம்தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்க உள்ளது.

இதனால் இந்த ஆண்டு ஜனவரி 15ம்தேதியும், பிப்ரவரி 19ம்தேதியும் ஆகிய இரு தேதிகளில் 2 தவணைகளில் வழங்கப்பட வேண்டிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு தேதி மாற்றி வழங்கப்படுகிறது.

காரணம் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 8 மாத குழந்தைகள் முதல் 15 ஆண்டு வரை உள்ளவர்களுக்கு தட்டமை,

ரூபெல்லா ஆகியவற்றை தடுப்பதற்கு இரட்டை தடுப்பூசி போடப்பட உள்ளது.  இதற்காக ஜனவரி, பிப்ரவரி மாதம் போட வேண்டிய போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து மார்ச் 5ம்தேதியும், 2வது தவணை ஏப்ரல் 2ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.

அன்றைய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். பிப்ரவரி மாதம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய குடற்புழு மாத்திரைகளும் அப்போதே வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக