நண்பர்களுக்கு வணக்கம் ..
நம் தமிழகத்தின் மரபு விதைகளை பாதுகாப்பதற்காக ஊர் ஊராக சென்று நாட்டு ரக சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய கிராம விதை வங்கிக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.
*மரபு_விதைகள்
பள்ளித்தோட்டம்
மரபு_விதைகளின்_தாம்பூல_பைகள்*
ஆகியவற்றை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்..
• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும்.
தக்காளி:
• •அன்னஞ்சி தக்காளி
• • கொடி தக்காளி
• • மஞ்சள் காட்டுத்தக்காளி
• • சிவப்பு காட்டுத்தக்காளி
கத்தரி:
• *பச்சை கத்திரி
• *நெகமம் வரி கத்திரி
• *உடுமலை சம்பா கத்தரி
• *உடுமலை உருண்டை கத்தரி
• *திண்டுக்கல் ஊதா கத்தரி
• *மணப்பாறை கத்தரி
• *எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
• *சேலம் முள் கத்தரி
• *கண்ணாடி கத்தரி
• *நத்தம் கீரி கத்தரி
• *கும்கோணம் குண்டு கத்திரி
• *தொப்பி அ தக்காளி கத்தரி
• *கல்லம்பட்டி கத்தரி
• *நந்தவன பச்சை கத்தரி
• *கோபி பச்சை கத்தரி
• *ஊதா முள் கத்தரி
• *கொத்து கத்தரி
• *நாமக்கல் பொன்னு கத்தரி
• *வெள்ளை வரி கத்தரி
• *பச்சை குண்டு கத்தரி
• *வெண்வரி சம்பா கத்தரி
• *வெண்வரி உருண்டை கத்தரி
• *மணச்சநல்லூர் கத்தரி
• *காரமடை வரி கத்தரி
• *காரமடை ஊதா கத்தரி
• *கடவூர் உருண்டை கத்தரி
• *வெங்கேரி கத்தரி
மிளகாய்
• *சம்பா மிளகாய்
• *முட்டி மிளகாய்
• *காந்தாரி மிளகாய் சிறியது
• *காந்தாரி மிளகாய் பெரியது
• *குண்டு மிளகாய்
• *தோடு மிளகாய்
வெண்டை:
• *வெண்டைக்காய்
• *மலை வெண்டை
• *சிவப்பு வெண்டை
கொடி வகைகள்:
• • பாகல்
• • மிதி பாகல்
• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
• உருட்டு சுரை
• செம்பு சுரை
• திருச்சி நீள புடலை
• தேனி நீள புடலை
• குட்டை புடலை
• பாப்பனூத்து தரை புடலை
• பச்சை பட்டை அவரை
• பெல்ட் அவரை
• கோழி அவரை
• செடி அவரை
• தம்பட்ட அவரை
• கொத்தவரை
•
• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்
•
• வெள்ளை பூசணி
• கையளவு பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்
பொரியல் தட்டை
• வெள்ளை தட்டை
•
பல்லாண்டு ரகங்கள்:
• மரத்துவரை
• கருங்கண் பருத்தி
• கோவில்பட்டி முருங்கை
• • பப்பாளி
• சுண்டக்காய்
• நாட்டு ஆமணக்கு
•
மலைக்காய்கறி ரகங்கள்:
• • வெள்ளை முள்ளங்கி
• சிவப்பு முள்ளங்கி
•
• பீன்ஸ்
• வரி பீன்ஸ்
• கருப்பு பீன்ஸ்
• சிவப்பு பீன்ஸ்
• ரெட்டை பீன்ஸ்
• குத்துசெடி பீன்ஸ்
• இலங்கை பீன்ஸ்
• பச்சை பட்டாணி
• பழ வெள்ளரி
• வரி வெள்ளரி
• குமரி வெள்ளரி
•
கீரை ரகங்கள்
• அரைக்கீரை
• • முளைக்கீரை
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை
• • சிவப்பு தண்டங்கீரை
• • பச்சை புளிச்சகீரை
• • சிவப்பு புளிச்சகீரை
• • மணதக்காளி கீரை
• • கொத்தல்லி
• • பருப்பு கீரை
• • பாலக்கீரை
• • அகத்திக்கீரை
• • காசினிக்கீரை
• • சிவப்பு முள் தண்டு கீரை
• பச்சை முள் தண்டு கீரை
• கொடி பசலைக்கீரை
• சவுரிக்கீரை
தொய்யக்கீரை
குப்பை கீரை
•
• மூலிகைகள்•
• பூனைக்காலி
தூதுவளை
• • முடக்கற்றான்
• • துளசி
• • திருநீற்றுப்பச்சிலை thaai basil & Italian basil
• *சதகுப்பை கீரை
• • செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
• செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்
விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது . வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.
• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்..
மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் நன்றி ...
______________________!____________________
*ஆதியகையின்_தாம்பூலம்*
திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..
சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
_______________________!____________________!
*ஆதியகை_பள்ளித்தோட்டம்*
ஊர் ஊராக போய் தோட்டம் அமைத்து கொடுத்துட்டு இருக்கோம். .. ஆனா சாமானியர்களுக்கு என தோட்டம் அமைத்து தந்தது இல்ல .. யாரும் அழைத்ததும் இல்லை .. இனி அதற்கான வேலையையும் செய்யனும் ..
வீட்டுத்தோட்டங்களுக்கு அடுத்த படியாக பள்ளித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கனும் .. கிராமங்களில் இருக்கும் பால்வாடி , ஆரம்பப்பள்ளிகள் என அடிப்படையான கல்வி நிலையங்களுக்கும் இனி தோட்டம் அமைத்த தர போகிறோம் .. பள்ளிகளில் இருக்கும் இடங்களில் தோட்டம் அமைக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வீடுகளிலும் அதை இயன்ற அளவு பின்பற்ற நம்மால் இயன்ற விழிப்புணர்வை கொடுக்கனும் ..
உங்கள் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு தோட்டம் அமைக்க எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் . அவ்வாறு தோட்டம் அமைக்க யார் வேண்டுமானாலும் தன்னார்வலர்களாக கலந்து கொள்ளலாம் ...
தோட்டங்களை பள்ளியில் அமைத்து சுயசார்பு எனும் விதையை பிஞ்சுகளின் நெஞ்சில் விதைப்போம் ..
நீங்கள் பள்ளியின் ஆசிரியர்களாகவோ , பொறுப்பாளர்களாகவோ , இருக்கலாம் .. நீங்கள் ஒத்துழைப்பு தரும் பட்சத்ததில் இது சாத்தியமான ஒரு விசயமாகும் ..
மாணவர்களுக்கான கல்வியில் அவர்கள் உண்ணும் உணவை உற்பத்தி செய்வது எவ்வாறு எனும் வாழ்வாதார கல்வியை செய்முறையுடன் கற்றுக்கொடுக்க கை கோருங்கள் ..
_______
paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது
8526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்
Regards:
Aadhiyagai
Village seed bank
Oddanchatram
Dindigul dt