சனி, 11 ஆகஸ்ட், 2018

இரவில் இதெல்லாம் செய்தால் தூக்கமே வராது என தெரியுமா

இரவில் இதெல்லாம் செய்தால் தூக்கமே வராது என தெரியுமா

உளவியல் ரீதியாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது உணவுப்பழக்கத்தில் மாற்றம், தொடர்ந்து எதைப்பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்திடும். நீண்ட நேரம் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றவை உங்கள் தூக்கத்தை கெடுத்திடும்.
தூக்கத்தை கெடுப்பதில் இன்னொரு முக்கியப் பங்காற்றுவது கனவு. நன்றாக தூங்கிக் கொண்டிருப்போம் திடிரென எதாவது ஒரு கெட்ட கனவு வந்து உங்களுடைய தூக்கத்தையே கெடுத்திடும். தூக்கத்தை சீர்ப்படுத்த இந்த உணவுகளை எல்லாம் தூங்குவதற்கு முன்னால் எடுத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்
ஐஸ் க்ரீம் : தூங்குவதற்கு முன்னால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாக எடுத்துக் கொள்ளும். இதனால் இரவுத் தூக்கம் தடைபடும், இரவு நேரங்களில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

ஐஸ்க்ரீம்களில் த்ரோம்போடோனின்(thrombotonin) இருக்கும். நாம் உற்சாகமாக இருப்பதற்கும் சோர்ந்து இருப்பதற்கும் நம் உடலில் இருக்கும் த்ரோம்போடோனின் தான் காரணம். இது அதிகம் சுரந்தால் நமக்கு சோர்வு என்பதே இருக்காது.
கீரை : இரவுகளில் கீரை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். கீரைகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கும். காலை மற்றும் மதிய நேரங்களில் கீரை எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் செரிக்கும். இரவினில் எடுத்துக் கொள்வதால் உங்கள் தூக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

மது : இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காபி : காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.
சாக்லேட் : காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம். ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை.
சிப்ஸ் : துரித உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக