செவ்வாய், 27 மார்ச், 2018

ரிலையன்ஸ் ஜியோ தொடங்க இந்த பெண்மணி தான் காரணம் 


ஜியோ தொடங்கி மிகக்குறுகிய காலக்கட்டத்தில் தனக்கென டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய  இடத்தை கொண்டது.இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களின் சேவை கட்டணத்தை குறைக்க முடிவு செய்தது ரிலையன்ஸ் ஜியோ.அதன்பபடி முதலில் அளவில்லா டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கியது ஜியோ.
ஆனால் மக்களிடையே  ஜியோவை பற்றி ஒரு கவலை இருந்தது.இந்தியாவில் அப்போது தான் 3ஜியே நல்ல நிலைக்கு வந்து கொணடிருந்தது.எல்லாரும் 3ஜி போனையே பயன்படுத்தி கொண்டிருந்தனர்.ஆனால் ஜியோவானது 4ஜி அலைக்கற்றை மட்டும் வழங்கியதால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.பலரும் வேறு வழியின்றி 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்த தொடங்கினர்.
இந்த மூன்று மாதத்தில் பல டெலிகாம் நிறுவனங்கள் வரலாறு காணாத அளவுக்கு வருவாய் இழப்பு மற்றும் சரிவைக் கண்டன. இந்த சரிவிலிருந்து மீழ ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னனி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது கட்டண சேவையை குறைத்தன. ஆனால் அது பலனளிக்கவில்லை.நீங்களே சொல்லுங்க இலவசமா ஒருத்தன் கொடுக்கும் போது எவனாச்சும் காசு கொடுத்து டேட்டா போடுவானாயா.
இப்படி ஜியோவின் சேவைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறின பல டெலிகாம் நிறுவனங்கள்.ஒருவழியாக ஜியோவின் மூன்று மாத இலவச சலுகைகள் முடிவுக்கு வந்தன என பல டெலிகாம் நிறுவனங்கள் பெருமூச்சு விட்டன.
ஆனால் நடந்ததோ வேறு ரிலையன்ஸ் ஜியோவின் முகேஷ் அம்பானி ஜியோ இலவசம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என அறிவித்தார்.இதில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த செய்தியானது அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் அடுத்த பேரிடியாக அமைந்தது.இதனால் கோபம் ஏர்டெல் மற்றும் வோடாபோனுக்கு பொத்துக்கிட்டு வர மத்திய தொலை தொடர்பு ஆணையமான டிராய்யிடம் புகார் அளித்தன. ஆனால் டிராய்யோ இந்தியாவில் டெலிகாம் சந்தையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஜியோவிற்கு வழிவிட்டது.
தற்போது அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஜியோ வழியில் தான் ஒடிக்கொண்டிருக்கினறன.தற்போது ஜியோவில் நாள் ஒன்றுக்கு  ஒன்று முதல் ஐந்து ஜிபி வரை வழங்கப்பட்டு வருகிறது.
சரி இப்போ மேட்டருக்கு வருவோம்சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'டிரைவர்ஸ் ஆஃப் சேஞ்ச்' எனும் விருதை பெற்ற முகேஷ் அம்பானி ஜியோ உருவாக முதல் காரணிமாக இருந்தது இஷா தான் என தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இஷா 2011-ம் ஆண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார்.கல்வி சார்ந்த பணிகளின் பணிகளை மேற்கொள்வதற்காக அவர் வீட்டின் 
கம்யூட்டரில் இணையத்தை உபயோகப்படுத்தினார்.ஆனால்
இண்டர்நெட் வேகம் படு மோசமாக உள்ளது என நொந்து கொண்டார் என முகேஷ் அம்பானி விழாவில் தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரை 2011 ஆண்டுகளில் 25 சதவிகிதம் பேர் 2ஜியையும் மீதம் 25 சதவீதம் பேர் 3ஜியையும்,மீதமுள்ள  50 சதவீதம் பேருக்கு இண்டர்நெட்டை பற்றி தெரியாமலும் அப்படியே தெரிந்திருந்தாலும் அப்போது இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருந்ததோடு, டேட்டா விலையும் அனைவராலும் பெற முடியாத ஒன்றாக இருந்தது.
மேலும் 2ஜி நெட்வொர்கை உருவாக்க ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் துறைக்கும் 25 ஆண்டுகள் ஆனது.ஏனென்றால் அந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் டெலிகாம் சேவையை விரிவுபடுத்த எந்த நிறுவனமும் முதலிடு செய்யவும் விரும்பவில்லை என்பதே உண்மை.
மேலும் அந்த காலக்கட்டத்தில் 1ஜிமொபைல் நெட்வொர்க் வழங்கியதில் அமெரிக்க ஆதிக்கம் செலுத்த, ஐரோப்பியா 2ஜி நெட்வொர்க்கிலும், சீனா 3ஜி நெட்வொர்க் வழங்குவதில் முன்னணியில் இருந்த நிலையில்,இந்த 2016 ஆண்டு முதல் ஜியோ மூலம் 4ஜி எல்டிஇ டேட்டா சேவையை வழங்குவதில் இந்தியா  உலக அளவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை படித்துள்ளது.என்னதான் இந்தியாவில் 4ஜி இணையவசதியின் வேகம்  குறைவாக இருந்தாலும் 4ஜி இணைப்புகளை அதிகம் வழங்கியதில் நம்ம இந்தியாதான் உலக அளவில் 14ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் ஜியோ இந்தியா முழுவதும் 4ஜி எல்டிஇ சேவையை வழங்க 3 வருடங்களை தான் எடுத்துக்கொண்டது.இப்பொழுது 5ஜி தொழில்நுட்பம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது.ஜியோ வந்த பிறகு  வரலாறு காணாத அளவுக்கு  இணைய வசதியும் மற்றும் தொலைதொர்பு மாற்றங்களை இந்தியா கண்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக