திங்கள், 19 பிப்ரவரி, 2018

சிரிப்பு ஒன்றுதான்..


சிரிப்பு ஒன்றுதான்..

சிரிப்பு ஆக்கபூர்வம் ஆனது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.

மனம் ஆரோக்கியம் அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.

ஆனால் நாம் அப்படி ஒரு மருந்து உள்ளதை மறந்து விடுகிறோம். அவ்வளவுதான்.

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல.

உலக வாழ் உயிர் இனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு..

மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி என பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு.

நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச் சுவையும், சிரிப்பும் பஞ்சம்ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம்.

சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பொரிய பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். சிரிப்பது உங்கள் கடமை.

மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.

மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை  உணர்வுதான்.சிரிக்க கூடியசக்திதான்.சிரிப்பு..

இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், துன்பங்களில் இருந்து
 விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி...

உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.

சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது.செல்வத்தைத் தருகிறது.

ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?..

ஆம்..,நண்பர்களே..,

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது.

சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்..

மனம் விட்டு சிரியுங்கள்..

மனம் சுத்தமாகிறது.

ஆரோக்கியமடைகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக