சனி, 9 செப்டம்பர், 2017

பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகை கண்டுபிடிப்பு...



பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகை கண்டுபிடிப்பு...


இது இன்றைக்கு புதிதாக கண்டுபிடிப்பென்று கூறி விட முடியாது.

அந்நாளில் எகிப்து மற்றும் கிரேக்கப் பெண்களுக்கு உலோகத்தில் பட்டை தீட்டப்பட்ட நகங்களை அணியும் வழக்கம் இருந்திருக்கிறது.

அதை அவர்கள் நெயில் நகை என்ற கண்ணோட்டத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் அப்போதிருந்தே நகங்களைச் சோடிக்கும் வழக்கம் பெண்களிடையே இருந்திருக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் பல உள்ளன.

அது மட்டுமல்ல, சத்ரபதி சிவாஜி தன்னை உறவாடிக் கொல்ல உத்தேசித்த எதிரியான அப்சல்கானைக் கூட தனது நகங்களில் மாட்டிக் கொண்ட புலி நகங்களால் தான் கொலை செய்தார் என்பது வரலாறு.

ஆகவே ஆபரணமாக அல்லாது உலோகங்களால் போலி நகங்களைச் செய்து மாட்டிக் கொள்வது தொன்று தொட்டே இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பில் இருந்த பிற தேசங்களிலும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆகவே ஆண்கள் யாரும் இதென்னடா நமது பர்சுக்கு வந்த புதுச் சோதனை என பீதியாக வேண்டாம்.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால் மறைந்து போயிருந்த பழக்கமொன்று இப்போது புனர்ஜென்மமெடுத்திருக்கிறது அவ்வளவு தான்.

பெண்கள் அணிந்து கொள்ள கிடைத்த புதிய நகையென்று இதைச் சொன்னாலும் கூட இதை அணிந்து கொள்வதில் இருக்கும் அசெளகரியத்தையும் பெண்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக