திங்கள், 22 மே, 2017

ஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்க ளைப் போக்கும் எளிய வழிகள்!



ஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்க  ளைப் போக்கும் எளிய வழிகள்!

இங்கு ஒரே வாரத்தில் கைகளை வயதானவர் போன்று வெளிக்காட்டும் சுருக்கங்களைப் போக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வயதான பின் சருமம் சுருக்கமானால் பரவாயில்லை. ஆனால் இளமையிலேயே சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால்

தான், அது அழகையும், மனதையும் பாதிக்கும். 20-களிலேயே ஒருவருக்கு சருமம் சுருக்கமானால், வயதாகிவிட்டது என்று அர்த்தமல்ல. சருமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

முக்கியமாக போதிய பராமரிப்பு கொடுப்பதில்லை என்பதை நமக்கு உணர்த்தவே சருமம் சுருக்கமடைகிறது. மேலும் நிறைய பேர் தங்களது முகத்திற்கு மட்டும் தான் அதிக பராமரிப்பு கொடுப்போம். இதனால் முகத்தை விட, கை, கால்கள் விரைவில் சுருக்கமடையும்.
இக்கட்டுரையில் கைகளை வயதானவர் போன்ற காட்டும் சுருக்கங்களைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அடிக்கடி பின்பற்றினால், கைகளில் உள்ள சுருக்கங்களை விரைவில் போக்கலாம்.

வாழைப்பழ பேக்
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துக்கள் உள்ளது. இது சுருக்கங்களை மறையச் செய்யும். அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதனை கைகளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை தினமும் கைகளில் தடவி குறைந்தது 30 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சரும செல்கள் ஊட்டம் பெற்று, வறட்சியால் சருமம் சுருக்கமடைவது தடுக்கப்படும்.

எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை மற்றும் பால்
எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை மற்றும் பால்
பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் பாலில் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அன்னாசி பேக்
அன்னாசி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, அழகை அதிகரிக்கும். அதற்கு அன்னாசியை அரைத்து, அதனை கைகளில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.


வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து, கைகளின் மேல் தடவி 30 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், வறட்சி நீங்கி, சுருக்கங்களும் மறையும்.

அரிசி மாஸ்க்
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கைகளில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தர்பூசணி
தர்பூசணியை அரைத்து கைகளின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சுருக்கங்கள் வேகமாக மறையும்.

தக்காளி
தினமும் தக்காளி துண்டை கைகளில் தடவி, நன்கு காய்ந்த பின்பு கழுவ வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும சுருக்கங்களை சீக்கிரம் மறையச் செய்யும்.

எலுமிச்சை மற்றும் பால்
பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கைகளில் தடவி 20 நமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

கடலை மாவு
இது பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு அழகு பராமரிப்பு செயலாகும். அது என்னவெனில், குளிக்கும் போது கடலை மாவைப் பயன்படுத்தி நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சரும பொலிவு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக