வெள்ளி, 7 ஏப்ரல், 2017

64-வது தேசிய விருதுகள்: ஜோக்கர் படத்திற்கு விருது - தமிழுக்கு 6...!



64-வது தேசிய விருதுகள்: ஜோக்கர் படத்திற்கு விருது - தமிழுக்கு 6...!

64வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொழிவாரியாக சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில், குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியான இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குப்பெற்று விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.வைரமுத்துவுக்கு 7-வது தேசிய விருது : சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‛தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‛‛எந்தப்பக்கம்... பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரமுத்து பெறும் 7-வது தேசிய விருது இதுவாகும்.சூர்யாவின் 24 படத்திற்கு இரண்டு விருதுகள் : விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்த ‛24 படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு நிர்வாகத்திற்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மோகன்லாலுக்கு சிறப்பு விருது : ‛புலி முருகன், ஜனதா கேரஜ் மற்றும் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல ஆகிய படங்களில் நடித்த மோகன்லாலுக்கு தேர்வு குழுவின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு ஆறு தேசிய விருதுகள் : சிறந்த படம், சிறந்த பாடகர் என ஜோக்கர் படத்திற்கு 2 விருதும், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்காக 24-க்கு 2 விருதும், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் சினிமா அல்லாத கதைக்காக தனஞ்செயனுக்கு தேசிய விருது உட்பட மொத்தம் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.


விருதுகள் விபரம் வருமாறு...சிறந்த நடிகர் : அக்ஷ்ய் குமார் (ருஷ்டம்)சிறந்த நடிகை : சுரபி லக்ஷ்மி(மின்னாமின்னுங்கு, மலையாளம்)சிறந்த இயக்குநர் : ராஜேஷ் மபூஸ்கர்(படம் - வென்ட்டிலேட்டர்)சிறந்த துணை நடிகை : சையிரா வாசீம்(தங்கல்)சிறந்த சமூகப்படம் : பிங்க்(ஹிந்தி)சிறந்த இசையமைப்பாளர் : பாபு பத்மநாபன்(கன்னடம்)சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : சிவாய்சிறந்த திரைக்கதை(ஒரிஜினல்) : சியாம் புஷ்கரண்(மகிஷிண்டே பிரதிகாரம்)சிறந்த திரைக்கதை(தழுவல்) சஞ்சய் கிருஷ்ணாஜி(தேஷ்கிரியா)சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் : பீட்டர் ஹெய்ன்(புலி முருகன் - மலையாளம்)சிறந்த படத்தொகுப்பு : ராமேஷ்வர்(வென்ட்டிலேட்டர்)சிறந்த ஒளிப்பதிவு - திரு(24)சிறந்த பின்னணி பாடகர் : சுந்தர் ஐயர்(ஜோக்கர்)சிறந்த பின்னணி பாடகி : இமான் சக்ரவர்த்திசிறந்த குழந்தைகள் படம் : தனக்(ஹிந்தி)சிறந்த குழந்தைகள் நட்சத்திரம் : ஆதீஷ் பிரவீன்(குஞ்சு தெய்வம்), சாஜ்(நூர் இஸ்லாம்), மனோகரா(ரயில்வே சில்ரன்)சிறந்த சுற்றுச்சூழல் படம் : தி டைகர் கூ கிராஸ்டு தி லைன்மொழிவாரியாக சிறந்த படங்கள்...தமிழ் : ஜோக்கர்ஹிந்தி : நீர்ஜாமலையாளம் : மகிஷிண்டே பிரதிகாரம்தெலுங்கு : பெல்லி சூப்புலுகன்னடம் : ரிசர்வேஷன்மராத்தி : தேஷ்கிரியாகுஜராத்தி : ராங் சைடு ராஜூபெங்காலி : பிசர்ஜன்

தேசிய விருதுகள் பட்டியல்:

சிறந்த படம்: மராட்டிய மொழிப் படம் - காசவ்

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மபுஸ்கா - மராட்டிய படம்- வென்டிலேட்டர்

சிறந்த தமிழ்ப் படம்: ஜோக்கர்

சிறந்த நடிகை: சி.எம்.சுரபி - மலையாளப் படம் மினாமினுகு படத்தில் நடித்தமைக்காக

சிறந்த நடிகர்: அக்‌ஷய் குமார் ரூஸ்டம்

சிறந்த உறுதுணை நடிகை: ஜாய்ரா வாசிம் - தங்கல்

சிறந்த பாப்புலர் திரைப்படம் - சதாமனம் பவதி (தெலுங்கு)

சிறந்த குழந்தைகள் திரைப்படம் - தனக்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- மஹோயோத ரானா (இந்தி)

சிறந்த சண்டை வடிவமைப்பு: பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம்: நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ரபர்த்தி

சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

சிறந்த நடன அமைப்பு: ராஜூ சுந்தரம் (ஜனதா கார்கே)

சிறந்த இசையமைப்பு: பாபு பத்மநாபா (அலமா)

சிறந்த ஒப்பனை: எம்.கே.ராமகிருஷ்ணா

சிறந்த எடிட்டிங்: ராமேஷ்வர் - வென்டிலேட்டர்

சிறந்த ஒப்பனை: சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்

சிறந்த ஒலி வடிவமைப்பு: காடு பூக்கும் நேரம் - ஜெயதேவன் சக்கா தத்

சிறந்த துணை நடிகர்: தசாகிரியா - மராத்தி

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - தி டைகர் வூ கிராஸ்ட் தி லேன் (The Tiger who crossed the lane)

சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - அமிதாப் பச்சனின் 'பிங்க்'

தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: திக்சோவ் பனாத்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி

சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம்: உத்தரப் பிரதேசம்.

சிறந்த திரைப்பட விமர்சகர்: தனஞ்சயன்

சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள்:

* மதிபூர் (துளு)

* ஜோக்கர் (தமிழ்)

* ராங்சைட் ராஜூ (குஜராத்தி)

* பெல்லி சூப்புலு (தெலுங்கு)

* தசகரியா (மராத்தி)

* பிஸார்ஜன் (வங்காளம்)

* மகேஷின்ட பிரதிகாரம் (மலையாளம்)

* கே சரா சரா (கொங்கனி)

* ரிசர்வேஷன் (கன்னடம்)

* நீர்ஜா (இந்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக