செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

வித்யாசமான காதல் தினம்

வித்யாசமான காதல் தினம்

நைஜர்

பிரம்மச்சாரி ஆண்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் இனத்துக்குரிய ஆடை, அணிகலன்களுடன் ஆடி, பாடி, மைதானத்தை வலம் வருவர். சுய வரம் போன்று நடக்கும் இந்நிகழ்ச்சியில் வேடிக்கை பார்க்கும் இளம்பெண்கள், அவர்களில் ஒருவரை தங்கள் ஜோடியாக தேர்ந்தெடுப்பர்.

இங்கிலாந்து

இங்கிலாந்திலுள்ள திருமணமாகாத பெண்கள், காதலர் தினத்தன்று தங்கள் தலையணையின் நான்கு மூலைகள் மற்றும் நடுவிலும், ஐந்து அரச இலைகளை வைத்து தூங்குவர்.அன்றிரவு கனவில், அவர்களது வருங்கால கணவர் வருவார் என்பது அவர்களது நம்பிக்கை!

ஜப்பான்

காதலர் தினம் பிப்ரவரி 14 மற்றும் மார்ச் 14 என இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14 அன்று காதலி, தன் காதலனுக்கு பரிசு அளிப்பாள்.அப்பரிசை, மார்ச் 14 அன்று காதலன், காதலிக்கு திருப்பியளிக்க வேண்டும். அப்போது, பரிசுடன் சாக்லெட்டையும் அளிப்பர். ஆனால், அதை கடையிலிருந்து வாங்காமல், வீட்டில், தன் கைப்பட செய்து அளித்தால் தான் உண்மையான காதல் என்று அர்த்தம்.

தைவான்

தைவானில் ஒரே ஒரு ரோஜாப் பூவை கொடுத்தால், நான் அன்பு செலுத்தும் ஒரே நபர் நீ தான்...' என்று பொருள். 11 ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தை அளித்தால், 'பலரிடம் அன்பு செலுத்தினாலும், நீ எனக்கு ஸ்பெஷல்...' என்று பொருள். அந்தப் பூங்கொத்தில், 99 ரோஜாக்கள் இருந்தால், 'என்றென்றும் நான் உன்னுடையவன்...' என்ற அர்த்தம். அத்துடன், பூங்கொத்தில், 108 ரோஜாக்கள் காணப்பட்டால், 'என்னை திருமணம் செய்து கொள்...' என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக