ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ஆண்மைக்குறைபாட்டிற்கு காரணம் கோழிக்கறியா, வெளியாகிய அதிர்ச்சி தகவல்

ஆண்மைக்குறைபாட்டிற்கு காரணம் கோழிக்கறியா, வெளியாகிய அதிர்ச்சி தகவல்

ஆணைப் பொறுத்தவரை இரவு, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில்தான் ஆணின் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். ஆனால், இன்றைக்கோ இரவு, நள்ளிரவு வேளைகளில்கூட கம்ப்யூட்டர் பணியில் ஈடுபடுகிறார்கள் ஆண்கள். இதனால் ஓர் ஆண் உணவு உண்ணும் நேரம், உறங்கும் நேரம் எல்லாமே மாறிவிடுகிறது. இதனால் உடல் இயக்கமும் மாறுகிறது.
உணவைப் பொறுத்தவரை அசைவ உணவு ஆண்மைக்கு வலு சேர்க்கக்கூடியது. இன்றைக்கோ, கோழிக்கறி சாப்பிடும் ஆண்களுக்கு ஆண் தன்மையே பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கறிக்கோழிகளின் செல்களை வேகமாக வளர வைக்க, அதன் எடையை அதிகரிக்க ஈஸ்ட்ரோஜென் ஊசி போடுகிறார்கள். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன்; அந்த ஹார்மோனை ஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும்.
மேலும், அந்தக் கோழிக்கு முழுமையான பெண்மைத் தன்மையும் கிடையாது. அந்தக் கோழியால் முட்டை போட முடியாது. கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் அந்தக் கோழியைச் சாப்பிடும் ஆண், பெண் இருவருக்கும் இதனால் பிரச்னையே ஏற்படும்.
பொதுவாக, எந்த உணவு ஊட்டம் அளிக்கும் என்ற புரிதல் இல்லாமலேயே நாம் கண்டதையும் சாப்பிடுகிறோம். காய்கறிகளில் விதையுள்ள வெண்டை, முருங்கை போன்றவற்றைச் சாப்பிட்டால் வீரியம் கூடும். நாமோ பெரும்பாலும் விதையில்லாத உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றையே அதிகமாகச் சாப்பிடுகிறோம். இதனால் விந்தணு உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடை வேட்டி. அதை அணிந்தால் காற்றோட்டமான சூழலில் இருக்கலாம். விதைப்பை தளர்ச்சியாக இருக்கும்படியான உள்ளாடைகளை அணிவதே நம் தமிழர் மரபு. ஆனால் இன்றைக்கு, பேன்ட் அணிகிறோம். காட்டன் பேன்ட் போட்டால்கூட பரவாயில்லை. இடுப்பை இறுக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுகளையே அதிகம் பயன்படுத்துகிறோம்.

வேலைச்சூழல் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பது, ஏ.சி-யில் அமர்வதால் உள் உறுப்புகள் சூடாகிவிடும். இதையெல்லாம் பல மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் `டெஸ்டோஸ்டீரான் (Testosterone) குறைந்துவிட்டது’ என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு சிகிச்சை எடுக்கச் சொல்லிவிடுவார்கள்.
சூரிய ஒளி உடம்பில்பட்டாலே டெஸ்டோஸ்டீரான் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், முழுக்கை சட்டை அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல்வது, சூரியஒளி புகாத இருட்டறையில் நாள் முழுக்க இருப்பதே பெரும்பாலான ஆண்களின் பழக்கமாகிவிட்டது. எண்ணெய்க் குளியல் எடுக்காததும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான். அதிகச் சூடுள்ள உடலில் உயிரணுக்கள் நிலைத்து நிற்காது. எண்ணெய்க் குளியல் உடல் சூட்டை சமநிலைப்படுத்தி உயிரணுக்கள் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சனி, 11 ஆகஸ்ட், 2018

இரவில் இதெல்லாம் செய்தால் தூக்கமே வராது என தெரியுமா

இரவில் இதெல்லாம் செய்தால் தூக்கமே வராது என தெரியுமா

உளவியல் ரீதியாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது உணவுப்பழக்கத்தில் மாற்றம், தொடர்ந்து எதைப்பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்திடும். நீண்ட நேரம் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றவை உங்கள் தூக்கத்தை கெடுத்திடும்.
தூக்கத்தை கெடுப்பதில் இன்னொரு முக்கியப் பங்காற்றுவது கனவு. நன்றாக தூங்கிக் கொண்டிருப்போம் திடிரென எதாவது ஒரு கெட்ட கனவு வந்து உங்களுடைய தூக்கத்தையே கெடுத்திடும். தூக்கத்தை சீர்ப்படுத்த இந்த உணவுகளை எல்லாம் தூங்குவதற்கு முன்னால் எடுத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்
ஐஸ் க்ரீம் : தூங்குவதற்கு முன்னால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாக எடுத்துக் கொள்ளும். இதனால் இரவுத் தூக்கம் தடைபடும், இரவு நேரங்களில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

ஐஸ்க்ரீம்களில் த்ரோம்போடோனின்(thrombotonin) இருக்கும். நாம் உற்சாகமாக இருப்பதற்கும் சோர்ந்து இருப்பதற்கும் நம் உடலில் இருக்கும் த்ரோம்போடோனின் தான் காரணம். இது அதிகம் சுரந்தால் நமக்கு சோர்வு என்பதே இருக்காது.
கீரை : இரவுகளில் கீரை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். கீரைகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கும். காலை மற்றும் மதிய நேரங்களில் கீரை எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் செரிக்கும். இரவினில் எடுத்துக் கொள்வதால் உங்கள் தூக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

மது : இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காபி : காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.
சாக்லேட் : காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம். ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை.
சிப்ஸ் : துரித உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.

ஆண்களின் விந்தணுவை அதிகரிக்க இந்த சின்ன விதைகளே போதும்...!



ஆண்களின் விந்தணுவை அதிகரிக்க இந்த சின்ன விதைகளே போதும்...!

இன்று பலரும் வருத்தப்படும் ஒரு முக்கியமான விஷயம் குழந்தையின்மையே. பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ ஏதேனும் குறைபாடு இருந்தால் அவர்களால் எளிதாக குழந்தை பெற இயலாது. இந்த பிரச்சினையால் இன்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு பல தீர்வுகளை தேடி நிம்மதியை இழந்தும் விடுகின்றனர். ஆனால் பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே நம் முன்னோர்கள் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மருந்துகளின் மகத்துவத்தை நமக்கு வழங்கி சென்றுள்ளனர். இன்று நாம் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றோம்.


குழந்தை பேறு என்பது மிகவும் அற்புதமான ஓன்று. பெண்களுக்கு எவ்வாறு சில வகையான குறைபாடுகள் இருக்கிறதே அதே போன்று ஆண்களுக்கும் சில வகையான குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக விந்து எண்ணிக்கை குறைவு, ஆண்மை குறைவு, மலட்டு தன்மை போன்ற பல கோளாறுகள் குழந்தை பெற தடையாக உள்ளது. இதற்கு அருமையான தீர்வு மருத்துவ குணங்கள் கொண்ட சில வகை விதைகள்தான். அவற்றின் முழு பயன்பாட்டை பற்றி நம் பதிவில் தெரிந்து கொள்வோம்.


*⚡பூசணி விதை⚡*


விந்து குறைவு பிரச்சினைக்கு ஒரு அருமையான தீர்வு இந்த பூசணி விதைகள். இதில் உள்ள அதிகப்படியான ஜின்க், விந்து உற்பத்திக்கு நன்கு உதவுகிறது. அத்துடன் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. நன்கு காய வைத்த பூசணி விதைகளை எடுத்து பொடியாக்கி, அதனை 1 கிளாஸ் பாலுடன் கலந்து தினமும் இரவு குடிக்க வேண்டும். இது ஆண்களின் விந்து குறைவை குணப்படுத்தும்.


*⚡முருங்கை விதை⚡*


இயற்கையாகவே முருங்கை மரத்தின் பயன்கள் எண்ணில் அடங்காதவை. முருங்கை காய் சாப்பிட்டால் எந்த அளவு ஆண்மை குறைவு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறதோ அதை விட அதிக பங்கு நன்மைகள் இந்த முருங்கை விதைகள் தருகிறது. முருங்கை விதை, பூனைக்காலி விதை, இயற்கை சர்க்கரை ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு பொடியாக்கி கொள்ளவும். பிறகு 5 கிராம் இந்த பொடியை எடுத்து 5 மில்லி அத்திப் பாலுடன் கலந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை சீராக அதிகரிக்கும்.


*⚡கொத்தமல்லி விதை⚡*


விந்து கோளாறு உள்ளவர்கள் நம்ம முன்னோர்கள் கடைபிடித்த இந்த மருத்துவத்தை கடைபிடியுங்கள். இது உடனடியாக நல்ல பலனை தர வல்லது. கொத்தமல்லி விதைகளை நன்றாக பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து கோளாறுகள் குணமடையும். மேலும் உடலுக்கு அதிக பலத்தையும் தரும்.


*⚡உளுந்து⚡*


ஆண்மை குறைவு சார்ந்த பல பிரச்சினைகளுக்கு உளுந்து அருமையான தீர்வு. பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் இந்த விதை நல்ல வைத்தியமாக உள்ளது. 20 கிராம் உளுத்தம் பருப்பை எடுத்து அதனை நெய்யில் வறுத்து, பின் அதனுடன் 250 மி.லி பாலை கலந்து நன்றாக கிளறி, வேக விட்டு மிதமான சூட்டில் இதனை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் விந்து எண்ணிக்கை அதிகரித்து உங்கள் இல்லற வாழ்வில் நலமாக இருக்கலாம்.


*⚡துளசி விதை⚡*


அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் இந்த துளசி ஆண்மை குறைபாட்டிற்கும் பயன்படுகிறது. துளசியின் விதைகளில் விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தன்மை உள்ளது. 50 கிராம் துளசி விதைகளை எடுத்து கொண்டு, அதனுடன் பனங்கற்கண்டு சிறிது சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு தினமும் அதிகாலையில் 100 மி.லி பாலில் 6 கிராம் அளவு இந்த பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பிரச்சினை குணமடையும்.


*⚡புளியங்கோட்டை⚡*


புளியங்கோட்டையை எடுத்து அதன் தோலை தட்டி விட்டு, வெறும் கொட்டையை மட்டும் நன்கு காய வைத்து, பொடி செய்து கொள்ளவும். இதனை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும். மேலும் உடல் வலிமை அதிகரிக்க செய்யும்.


*⚡இலவம் விதை⚡*


இலவம் பழம் எந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதோ அதே அளவிற்கு அதன் விதைகளும் அதிக மகத்துவம் வாய்ந்தது. இலவ மரத்தின் விதைகள், வெட்டிவேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து 5 கிராம் ஓமத்துடன் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். பின் 1 கிராம் அளவு எடுத்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.


*⚡திரிபலா⚡*


ஆண்மை குறைவை போக்க ஒரு அருமையான மருந்து இந்த திரிபலா. ஆண்களின் விந்து குறைபாட்டை சீரான முறையில் அதிகரிக்க இது உதவும். திரிபலா என்பது கடுக்காய் , தான்றிக்காய் ,நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே. இந்த பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பனங்கற்கண்டை பொடி செய்து, பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு சார்ந்த பல கோளாறுகளுக்கு விடை கிடைக்கும்.


*⚡தொட்டாசிணுங்கி விதை⚡*


நம்மில் பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இந்த தொட்டாசிணுங்கி செடியின் விதைகளுக்குள் ஒளிந்து கொண்டுள்ளது. இந்த விதைகளை எடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து பொடியாக்கி, பாலுடன் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி சீராகும்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கோபத்தை குறைக்க வழி.....!


கோபத்தை குறைக்க வழி.....!

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடந்தது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பதில் தந்திருந்தார்கள்.
ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துவிடுகிறது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறாகச் சொல்லி விட்டார்கள் என்று உடனே கோபம் வந்துவிடும் என்றார். அடுத்தவர், நான் செயாத்தைச் செய்த மாதிரி சொல்லி விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அவர்கள் என்கிறார்.

இன்னொருவர், சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லுகின்றார். வேறோருவரோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என்றார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் எதாவது செய்தால் இவர்களுக்குக் கோபம் ஏற்படுமாம். அது சரி நீங்களே எதாவாது தவறு செய்தால் உங்கள் மீது கொபப்படுவீர்களா? என்பதற்கு, அது எப்படி நீங்கள் எங்கள் மேலேயே நாங்கள் கோபப்படுவோமா என்றனர்.

கோபம் என்றால் என்ன?
கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர்தான் கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயற்பட்டால் நட்பு நசுங்கி விடும்.
 உறவு அறுந்து போகும்.
 உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன?
 சவுக்கு எடுத்து சுளீர் சுளீர் என்று எங்களையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லை.
 கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது.

இந்தப்பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது.
 இதைத் தடுக்க வைத்தியரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம்.
இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல சத்தியமான உண்மை இது...

 அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.
 முதலில் அடுத்தவர்களுக்கு கோபம் வருகின்ற மாதிரி நீங்கள் நடக்காதீர்கள்.
அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்கள்.

அவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால் முதலில் மன்னிப்புக் கேளுங்கள்.
 ஈகோ பார்க்காதீர்கள்.
 நீங்கள் கோபப் படுகின்ற மாதிரி அடுத்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் மன்னிப்புக் கேட்டு என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கள் அமைதியாகி விடுங்கள். எவர்மேல் தவறு என்று சிந்தியுங்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்.
 தனிமையாக உட்கார்ந்து யோசியுங்கள். அடிக்கடி யாரிடம் கொபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு இன்பமாக சிரித்து பேசுங்கள்.
 அடுத்தவர்களே தவறு    செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செய்து விட்டார்கள் என்று கோபப்படுகிறோம்.
 என்ன நடந்துவிட்டது பெரிதாக. என்னத்தை இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.
 அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளித்து விடலாம் என்னும் முடிவுக்கு வாங்கள்.

வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிதாகச் சாதித்து விட்டீர்கள் என்று.
 நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதித்தோம் என்று யோசித்து விட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது செய்யாவிடினும் கோபம் என்கிற கொடிய நோயை பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செய்த மாதரி தான்.
 தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு வினாடி யோசித்தானால் தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.
இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகம்  பண்ணுவீர்கலானால்... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்....

பெண்கள் மட்டும் படிக்கவும்: அந்த நாட்களில் பெண்கள் செய்யும் பெரும் தவறுகள்!


பெண்கள் மட்டும் படிக்கவும்: அந்த நாட்களில் பெண்கள் செய்யும் பெரும் தவறுகள்!

மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின்போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.

* மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள் ஒன்று தான் உணவுகளைத் தவிர்ப்பது. நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுகள் தான் வழங்குகின்றன. அந்த உணவுகளைத் தவிர்த்தால், அதனாலேயே கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

* ஜங்க் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே மாதவிடாய் காலத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

* மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களால் கடுமையாக அவஸ்தைப்படக்கூடும். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

* பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்கமாட்டார்கள். இப்படி தூங்காமல் இருந்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள்.

* மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம். இக்காலத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

* யோகா, உடற்பயிற்சி போன்றவை உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் அதை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்ப்பதே நல்லது.

* பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணி நோய்த்தொற்றுக்களையும், துர்நாற்றத்தையும் உண்டாக்கும். ஆகவே இக்காலத்தில் துணிகளுக்கு பதிலாக சுத்தமான சானிடரி பேடுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.

ஆளுமை வெளிப்பாடு: ஆளுமைத் திறன் என்பது என்ன



ஆளுமை வெளிப்பாடு: ஆளுமைத் திறன் என்பது என்ன

படித்து வாங்கிய பட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்பம், கைவினைகள், கலை, பேச்சு, மொழி, விளையாட்டு முதலான திறமைகளும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்தத் திறமைகளுக்கு அப்பால் இன்னொரு வார்த்தையும் நம் காதுகளில் அடிக்கடி விழும். ஆளுமை என்ற சொல்தான் அது.

ஆளுமை என்பது நாம் யார் என்பதைப் பற்றிய சொல். தனித் திறமைகள் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய அம்சம். படிப்பும் பல்வகைத் திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் தலைவர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் வேறுபடுத்துகிறது.

ஒருவர் வலுவான ஆளுமையாக விளங்க என்ன செய்ய வேண்டும்? இதைப் பல விதமாக விளக்கலாம். உதாரணத்துக்கு ஒரு கோணத்தை இங்கே எடுத்துக்கொள்ளலாம்.

எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்ளுதல்

அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறோம். அதில் எதிர்பாராத சூழல் எழும்போது அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குரலைக் கேளுங்கள்: “நானும் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் எதற்காகப் படிக்கிறோம் எனப் புரியாமல்தான் படித்துவந்தேன். அன்று சுடப்பட்டபோதுதான் கல்வியின் அர்த்தம் ஆணி அடித்தாற்போலப் புரிந்தது. பெண் கல்வி இத்தனை பேரைப் பதற்றம் கொள்ளச் செய்கிறது என்றால் அது எத்தகைய பலத்தைத் தர வல்லது என்பது புரிந்தது. ஆனால், அன்று என்னைச் சுட்டவர் ஒரு தவறு செய்துவிட்டார். என்னைச் சுட்டு, என்னுள் இருந்த பயத்தை முழுவதுமாகக் கொன்றுவிட்டார். இனி சாவைக் கண்டு எனக்கு பயம் இல்லை. இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஒருநாள் வரும், அன்று அனைத்துக் குழந்தைகளும், ஆணோ பெண்ணோ கறுப்போ வெள்ளையோ கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ பள்ளிக்கு நிச்சயம் செல்வார்கள்.”

இன்னொரு குரலையும் கேளுங்கள்:

“இது ஜனநாயக நாடு. ஜனநாயகத்தில் சமத்துவத்துக்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு மாணவரோ ஒரு ஏழையோ ஒரு தொழிலாளியோ அம்பானியோ, அதானியோ யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. வன்முறைக்கான விளக்கம் இல்லாமல் வன்முறையை எப்படிப் புரிந்துகொள்வது? துப்பாக்கியால் சுட்டு மனிதர்களைக் கொல்வது மட்டும் வன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் தந்திருக்கும் உரிமைகளை ஜே.என்.யூ. நிர்வாகம் தர மறுக்குமானால் அதற்குப் பெயரும் வன்முறைதான்.

இதைத்தான் அமைப்பு சார்ந்த வன்முறை என்கிறோம். இவர்களெல்லாம் நீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது? ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அதுதான் நீதி நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உணவகங்களுக்குள் நாய்களும் இந்தியர்களும் நுழைய முடியாது. அப்போது அதுதான் நீதி. அந்த நீதிக்கு நாம் சவால் விட்டோம். இப்படித்தான் உங்களுடைய நீதி எங்களுடைய நீதிக்குப் புறம்பானதாக இருக்கும்போது அத்தகைய நீதியை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கும்போதுதான் நீதி நிலவுவதாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.”

எங்கிருந்து வந்தார்கள்?

முதலாவது, பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடிவரும் பாகிஸ்தானி சிறுமி மலாலாவின் குரல். இரண்டாவது, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பின் தலைவர் கண்ணையா குமார் பேசியது.

மலாலா பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா யூசப் சாய் தலைமை ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்துவந்தார். 2008-ல் ஸ்வாட் பகுதியை தலிபான் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தார்கள். பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது; பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது எனும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

இந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்தார் 11 வயது மலாலா. 2009-ல் பி.பி.சி. நிறுவனத்தின் உருது மொழி இணையதளத்தில் தலிபான் அத்துமீறலை உலகத்துக்கு அம்பலப்படுத்தினார். பெண் கல்வி வேண்டும், குழந்தைத் திருமணம் கொடுமையானது, பெண்களுக்கு உரிய சுகாதாரம் தேவை எனத் தொடர்ந்து வலைப்பதிவு இட்டார். பாகிஸ்தான் பெண்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கினார்கள்.

தலிபான்கள் கொதித்தெழுந்து மலாலாவைக் கொல்ல முயன்றார்கள். அக்டோபர் 9, 2012-ல் மலாலா சுடப்பட்டார். அந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த மலாலா, முன்பைவிடவும் தீவிரத்துடன் தன் பணிகளை மேற்கொண்டார். இவர் ஆற்றிய சேவைகள் உலகின் கவனத்தைக் கவர்ந்தன; அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தன.

தனக்கு ஏற்பட்ட அபாயத்தை மலாலா எப்படி எதிர்கொண்டார் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்த்தோம். இந்த அணுகுமுறைதான் ஆளுமைத் திறனின் முக்கியமான அம்சம். இதுதான் மலாலாவைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. இதுதான் அவருக்கு உலகின் மதிப்பு வாய்ந்த விருதைப் பெற்றுத்தருகிறது. தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

விடாமல் போராடும் குணம்

கண்ணையா குமாரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் பிஹாரில் பெஹாத் கிராமத்தில் பிறந்தார். அப்பா ஜெயசங்கர் விவசாயத் தொழிலாளி. அம்மா மீனாதேவி அங்கன்வாடி தொழிலாளி. அப்பா நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்கிறார். அம்மாவின் சொற்ப சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தப்படுகிறது. பள்ளி நாட்களிலிருந்தே இடதுசாரிகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் கண்ணையா.

2007-ல் புவியியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் (ஏ.ஐ.எஸ்.ஏ) உறுப்பினரானார். தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜே.என்.யூ.வில் முனைவர் பட்ட ஆய்வாளர். 2015-ல் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஷ்மீர் பிரச்சினை முதல் தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவிகள் தற்கொலை வரை விவாதிக்கும் களமாக ஜே.என்.யூ. இருந்துவருகிறது. அதில் இடைவிடாது குரல் எழுப்பிவருகிறார் கண்ணையா. அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின்போது தேசத்துரோகி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கொலைத் தாக்குதலைச் சந்தித்த மலாலா மனம் தளராமல் தொடர்ந்து போராடுவதைப் போலவே குமாரும் இத்தகைய குற்றச்சாட்டைக் கண்டு அசராமல் தொடர்ந்து போராடுகிறார்.

ஆளுமைத் திறனுக்கான வரையறை இங்கே விரிவடைகிறது. மதிப்பெண்களைக் குவிப்பது, கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் சேரத் தயார்படுத்திக்கொள்வது ஆகியவை மட்டும் போதுமா? பொது விவகாரங்களிலோ சமூகப் பிரச்சினைகளிலோ பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கலாமா? அப்படி இருப்பவர்களால் நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள முடியும்?

ஆளுமையை வளர்ப்பது எப்படி?

ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான புத்தகங்களும் சிறப்பு மையங்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. பேச்சாற்றல், நேர நிர்வாகம், உடல் மொழி, குரலில் ஏற்ற இறக்கம் இப்படிப் பல சூட்சுமங்களை இவை சொல்லித்தருகின்றன. ஆனால், பரீட்சை எழுதிவிட்டுத் தோழிகளோடு வீடு திரும்பும்போது, “யார் மலாலா? யார் மலாலா?” எனக் கேட்டு, சரசரவெனச் சுடப்படுகிறாள் ஒரு சிறுமி. மரணப் படுக்கைக்கு தள்ளப்படும் அவள் ஓராண்டு கழித்து நிமிர்ந்து நின்று உலக மக்களைப் பார்த்து உரையாடுகிறாள்.

அடித்தட்டில் இருந்து முன்னேறி, முனைவர் பட்டம் படிக்கும் வாய்ப்பைப் பெறும் சாமானிய இளைஞன் தனது அரசியல் பார்வைக்காக அரசின் வழக்கைச் சந்திக்கிறான். எனினும் தன் கொள்கையில், செயல்பாட்டில் கொண்ட உறுதி தளராமல் நிற்கிறான். கண்ணையாவின் கொள்கைகள் எத்தகையவை என்பது விவாதத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால் தன் கொள்கையில் அவருக்கு இருக்கும் உறுதியும் தெளிவும் நெருக்கடியைக் கண்டு அஞ்சாமல் போராடும் குணமும் முக்கியமானவை.

ஆளுமைத் திறன் என்பதற்கான பொருளை விரிவுபடுத்தும் செயலை மலாலாவும் கன்னையாவும் செய்திருக்கிறார்கள். இளைஞர்களின் மென்திறனை மேம்படுத்தக் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்திருக்கும் காலகட்டத்தில் இந்த இளைஞர்கள் ஆளுமைத் திறனுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள்.

30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்!


30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்!

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

வீட்டு பிரச்சனையில் இருந்து அலுவலக பிரச்சனை வரை அனைத்தையும் தனியாகவே சமாளித்து வெற்றி காண்பவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் தங்களது உடலின் மீது மட்டும் அக்கரை எடுத்துக்கொள்வதே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்திய காலம் முதல் நிறைய ஹார்மோன் மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக கர்ப்பக் காலத்தில் அவர்கள் நிறைய வலியைப் பொறுத்துக் கொண்டாலும் அதில் சந்தோஷம் தான் அடைகின்றனர். பின்னர், மாதவிலக்கு நின்ற பிறகும் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம்.

இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. அப்படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மின் ஒலி இதய வரைவு எனும் யகோகார்டியோகிராம் செய்து உங்களது இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பரிசோதனை போன் டென்ஸிட்டி எனும் எலும்பு அடர்த்திக்கு வைட்டமின் டீ மிக அவசியம். வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே, எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைபர் தைராய்டு, மற்றொன்று ஹைபோ தைராய்டு. கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே, 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் பொதுவான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குண்டாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 30 வயதை அடைந்த பெண்கள் நிச்சயம் இந்த பரிசோதனையை மேற்கோள்வது அவசியம். இல்லையென்றால், இது கர்ப்பக் காலத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மேமொகிராம் பரிசோதனை தான் உதவுகிறது.

சாதாரணமாக இதனை 40 வயதிற்கு மேல் தான் பரிசோதிக்கக் கூறுவார்கள். ஆனால், அதற்கு முன்பே ஏதேனும் அறிகுறி தோன்றினால் 30 வயதிலேயே செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா…

எல்லாப் பெண்களும் 30 வயதிற்கு மேல் நிச்சயம் இந்த பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும். இந்த பரிசோதனை செய்துக் கொள்வதால் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய். எனவே, இதனை மறக்காமல் பரிசோதித்துப் பாருங்கள்

பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்று தான் இந்த இரத்த சோகை. குறிப்பாக கர்ப்பக் காலத்தில் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே, 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்று ஒரு இரத்த பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

செக்ஸ் டூரிஸம்!!! ! குழந்தை கடத்தல் !


செக்ஸ் டூரிஸம்!!! !   குழந்தை கடத்தல் !!!!!!

தமிழகத்தையே உலுக்கிக்கொண்டு இருக்கும்  செக்ஸ் டூரிஸம் இதை பத்தி தான் நம்ம இன்னிக்கு பேசப்போறோம்.

இது தான் தலைப்புனு நான் நேத்து சாயங்காலமே பாலத்தின் நிர்வாக பொறுப்பாளர் திரு. பெல் முத்துக்குமார் அவர்களிடம் சொல்லிட்டேன்.

அதைப்பற்றிய அறிவிப்பு பதிவிற்காக முன் கூட்டியே சொல்லுவது வழக்கம் நானும் அந்த. விதிகளுக்கு கட்டுப்பட்டு தெரியப்படுத்தி விட்டேன்.

ஆனால் அவர் தமிழக டூரிஸம் பற்றி நான் பேச இருப்பதாக பதிவிட்டிருந்தார்.   பதிவை படித்ததும் சிரிச்சிட்டேன் .எப்படி ஆரம்பிக்கிறதுனு யோசிச்ச எனக்கு நல்ல துவக்கப்புள்ளி கிடைச்சது மாதிரி இருந்தது.  இது தாங்க இன்றைய சமூக அவலம் அத்தனைக்கும்  முக்கிய காரணம்.

 செக்ஸ்ங்கிற வார்த்தையே நம் கலாச்சாரத்தில் கெட்ட வார்த்தையாகி போய்விட்டதன் விளைவுகளை தான் இன்று நாம் அனுபவிக்கின்றோம்.

Periods.love. sex இதெல்லாம் கெட்ட வார்த்தைகள் என நினைக்கும் சமூக போராளிகள் தான் முகநூலிலும் இருக்கிறார்கள் என்பதற்கு இது தான் பெரிய உதாரணம்.

அனைவராலும் கடந்த ஒரு வார காலமாக பேசப்பட்ட நிகழ்வு தான் எவ்வளவு பேசினாலும் தீராத வலியும் வேதனையுமான சம்பவம்
இந்தியாவையே உலுக்கிய நிருபையா சம்பவத்தை விட  கொடுமையான சம்பவம் சத்தமே இல்லாமல் அரங்கேறியுள்ளது. சென்னை அயனாவரத்தில்.
12 வயது குழந்தை அவள் வயதை விட அதிகமான எண்ணிக்கையிலான ஆண்களால் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறாள்.

மனித மனம் விசித்திரமானது அன்பு பாசம் காதல் போல வன்மத்தையும் சேர்த்தே சுமந்து கொண்டு அலைகிறது என்பதை தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது. தாத்தா மாமா அண்ணா என தான் அந்த குழந்தை அந்த மிருகங்களை உறவு கொண்டு அழைத்திருக்கும்

இந்த மாமாக்களும் தாத்தாக்களும் தன்னை கடித்து குதறும் என அந்த குழந்தை  எதிர்பார்த்திருக்க மாட்டாள் இதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அந்த குழந்தைக்கு புரிய வைக்காதது தான் அவளின் தாய் செய்த முதல் குற்றம்

குடும்ப உறவு முறைகளால் தான் குழந்தைகள் பாலியல் ரீதியாக பெருமளவில் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை

 எந்நேரமும் இந்த குற்றம்யார் வீட்டிலும் நடக்கலாம்.எங்கெல்லாம் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் குழந்தைகள் ஏதோ ஒரு விதத்தில் துற்புறுத்தப்படுகிறார்கள்  என்பதே உண்மை

நாம் பாதுக்காப்பு என நம்பும் பள்ளிக்கூடங்களிலும் இதே நிலை தான்

குருவிற்கான மரியாதையை சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில் அந்த குரு ஒரு ஆண் என்றால் தன் குழந்தையின் பாதுகாப்பை  தான் முதலில் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெற்றவர்கள் இருக்கிறோம்.

இந்த அயனாவரம் சம்பவத்தை பொறுத்த வரை முதல் குற்றவாளி தாய் தான். மாற்றுதிறனாளியான தன் குழந்தையை கூடுதல் கவனம் செலுத்தி பார்த்திருக்க வேண்டும். பள்ளிக்கு லிப்டில் செல்லும் குழந்தையை தான் அழைத்துச்சென்று பள்ளி வாகனத்தில் அனுப்புவதை விட வேறு ஆணிப்புடுங்கும் வேலை என்ன என்பதே முதல் கேள்வி.

சரி அம்மா குற்றவாளிதான் 175 வீடுகள் உள்ள Block. இந்த வீடுகளை எல்லாம் தனித்தனியாக எடுத்து வைத்தால் அது ஒரு தனி  கிராமம் அளவிற்கு இருக்கும். அத்தனை மனிதர்கள் நடமாடும் இடத்தில் ஒரு குழந்தை தொடர்ந்து 7 மாதம் 17 பேரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது இதுயார்   கண்ணிலும் படாமல் இருந்ததும் ஒருவருக்கு கூட சந்தேகம் வராமல் இருந்ததும் வியப்பு தான். அப்படியா நாமெல்லாம்  இயந்திரமாகி போய்விட்டோம் .என்பதுவும் மனதை உறுத்தும் கேள்வி தான்

தேசிய குற்றஆவண தகவலின் படி எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்கொடுமைக்கு ஆளாகிறதாம் .

2007 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் படி
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் தான் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளனராம். ஆனால் நாம் பேசுவது பெண் குழந்தைகளை பற்றி மட்டுமே

 இது ஏன் நடக்கிறது? ?இதற்கு தீர்வென்ன??அடுத்தவர் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆத்திரப்படும் நாம் நம் குழந்தைகளை எப்படி பாதுக்காக்க போகிறோம்.நம்மை சுற்றியும் நம் குழந்தைகளை சுற்றியும் என்ன தான் நடந்துக் கொண்டிருக்கிறது

குழந்தைகள் தான் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள்.குழந்தைகள் விசயத்தில் அனைவரிடமும் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள் தவறே.இல்லை.

17 பேரில் ஒருவருக்கு கூட இது தவறு பாவம் எனத் தோன்றவில்லை எனில் ஆண் சமுதாயத்தின் மீது எப்படி நம்பிக்கையும் மதிப்பும் வரும் .

கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் தண்டனைகள் கடுமையாக்க வேண்டும் வக்கீல்கள் ஆஜராக மாட்டோம் இப்படி நிறைய ஆண்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விசயம் என்றாலூம் 17 பேரின் முகமுடி மட்டுமே விலகி உள்ளது இன்னும் அக்கம் பக்கத்தில் எத்தனை பேர் இருப்பார்களோ என்ற பயமும் நமக்கு தோன்றதான் செய்கிறது.

ஏனென்றால் நான் சொல்ல போகும் செய்தி அப்படி.இது என் கற்பனை அல்ல உண்மை செய்தி அனைவரும்  கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தியும் கூட

"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.

குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.

அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன

நம் நாட்டில் மும்பை ;கோவா; புனே;டெல்லி;பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள்

“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.

 உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

 ‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.

ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.

 இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.

 இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.

 அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை - வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.

ஆண்குழந்தைகளும்  பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்


குழந்தைகள்தொலைந்துவிட்டால்...நாம் என்ன செய்ய வேண்டும்

விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர்.

எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள்

. இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்.

 கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்

எந்த கடுமையான சட்டமும் யாரையும் கட்டுப்படுத்தாது. ஏனென்றால் நம் நாட்டில் சட்டத்திற்குள் ஓட்டை இல்லை ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கிறது. நம் குழந்தைகளை முடிந்த வரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

.இது அரசியல் பதிவு அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த Group active members எல்லாருமே இந்த பதிவை படிக்கனும் தங்கள் கருத்துக்களையும் குழந்தைகளின் பாதுக்காப்பிற்கான ஆலோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
- ஜி.அர்ச்சனாLLM. , PGDFL. , MBA. , DHE. ,
அரசு சிறப்பு குற்றப் பொது வழக்கறிஞர்
மாவட்ட விரைவு வழி மகளிர் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்.

நன்றி: பாலம்

ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இந்த பிரச்சனைகள் நீங்கும்.

ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இந்த பிரச்சனைகள் நீங்கும்.

இன்றும் சளி பிடித்து தலை பாரமாக இருந்தால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து முகத்திற்கு ஆவி பிடிப்போம். இப்படி செய்யும் போது தலையில் அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீர் வியர்வையின் மூலம் வெளியேறி முக வீக்கம், நீர்க்கோவை, தலைபாரம் ,தலைவலி குறைந்து ஒரு புத்துணர்வு கிடைக்கும்.இப்படி சளி பிடித்தால் மட்டும் செய்வதை வாரம் இரண்டு முறை கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு செய்தால் கிடைக்கும் அற்புதமான நன்மைகளை பற்றிதான் இங்கு பார்க்கபோகிறோம்.
ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து விடும். அதாவது, முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் பருக்கள் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகப்பரு போய்விடும் அதாவது முகப்பரு இருப்பவர்கள் oru 5 நிமிடம் வரை ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், முகப்பரு உடைந்துவிடும். இதனால் முகப்பருவை எளிதாக போக்கி விடலாம்.
பொதுவாக முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. இது போன்று வாரம் இரண்டு முறை ஆவி பிடித்தால், அழுக்குகள் நீங்கி பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும். முகம் பொலிவு பெரும்: ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் அழகாக, பொலிவோடு இருக்கும்.
மேலும் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள் மட்டுமல்லாமல் கிருமிகளும் விரைவில் வெளியேறிவிடும் அதேபோன்று முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் வேரோடு நீங்கிவிடும். மீண்டும் வராது . ஆகவே வாரம் இரண்டு முறை முகத்திற்கு ஆவி பிடித்தால் சோர்ந்து போன உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன், அழகாக மாறி விடும். மேலும் இதில் சேர்க்கபடும் வேப்பிலை சிறந்த கிரிமி நாசினி என்பதால் அதன் பலன் கண்கூடாக தெரியும்.
உண்மையிலேயே பயன் தரக்கூடிய இந்த ஆவிபிடித்தல் முறையை நீங்களும் வாரம் இரண்டு முறை செய்து சருமத்தை அழகாக மாற்றி கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள பலசரக்கு சாதனங்களில் வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் இருக்க,இதை ட்ரை பண்ணுங்க...

உங்கள் வீட்டில் உள்ள பலசரக்கு சாதனங்களில் வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் இருக்க,இதை ட்ரை பண்ணுங்க...

பொதுவாக குளிர் காலங்களிலும்,மழை காலங்களிலும் தான் பூச்சிகளும்,வண்டுகளும் வீட்டில் உள்ள அரிசி,உளுந்து,மாவு போன்ற பலவகையான பொருட்களை பாழாக்கும்.

கோடைகாலத்தில் இந்த பிரச்சனையே வராது.எனவே எந்தெந்த பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.
  • உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு போன்றவற்றில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வராமல் இருக்க வேப்பிலைகளையும்,வசம்பு துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும்.
  • அரிசியில் மிளகாய் வத்தலை போட்டு வைத்தால் வண்டு வராது.
  • சர்க்கரை மற்றும் வேறு வகையான இனிப்பு பொருட்களில் எறும்புகள் வராமல் இருக்க கிராம்புகளை சிறிதளவு போட்டு வைத்தால் போதுமானது.
  • பிரியாணி அரிசியில் சிறிது உப்பு தூள் கலந்து ஒரு டப்பாவில் தட்டி வைத்துக்கொண்டால் பூச்சி கூடுகள் கட்டாது.
  • புளியை சுத்தம் செய்து சிறிது கல் உப்பு சேர்த்து,கண்ணாடி குடுவையில் வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் பூச்சிகள் வராது.
  • அரைத்து வைத்த மாவில் பூச்சிகள் வராமல் இருக்க ,சிறு துணியில் சிறிதளவு உப்பை கட்டி மாவு இருக்கும் பாத்திரத்தில் வைத்தாலே போதும்.
  • சில பொருட்களில் பூச்சிகள் வருவதாக தென்பட்டால் அதனை அப்படியே சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும்.

பாடம் படிக்க உகந்த நேரம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

பாடம் படிக்க உகந்த நேரம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

எதைச் செய்ய வேண்டுமானாலும், அதற்கென ஒரு நேரம் இருக்கிறது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது வழக்கு. ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழையால் ஆற்றில் புதுநீர் புரண்டோட, அதுவே பயிரிடுவதற்கு ஏற்ற பருவம் என்பதை இது குறிக்கிறது.
1)அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்தால் நாள் முழுவதும் உடலிலும், உள்ளத்திலும் ஒரு சக்தி நிறைந்திருப்பதை உணரலாம். அதையே கடின உழைப்பின் கடைசியில் மாலையில் செய்தாலும், இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்து அடுத்த நாளை உற்சாகத்தோடு தொடங்கலாம். ஏதோ ஒருவகையில், எப்பொழுது செய்தாலும் உடற்பயிற்சி உகந்தது என்பது மட்டும் உண்மை.
Credits:lanksarinews
2)கல்வியே கண்கண்ட கடவுள் என்ற நிலையில் கற்பதில் போட்டி கணக்கின்றி நடக்கிறது. ஆனால், தினமும் படிக்க ஏற்ற நேரம் என்பது மட்டும் ஒரு கேள்விக்குறியாக இன்னும் இருக்கிறது. பெற்றோர்களிடம் கேட்டால் 24 மணி நேரமும் என்பார்கள்; அதையே ஆசிரியர்கள் 48 மணி நேரம் என்பார்கள். 
3)‘கணிதத்தில் கடன் வாங்குவதைப்போல எங்கிருந்து வேண்டுமானாலும் நேரத்தை வாங்கு’ என்பார்கள். ஆனால், பல மாணவர்களோ தேர்வுக்கு முந்தைய நாள் அல்லது படிப்பு விடுமுறைதான் தேர்வுக்குப் படிக்கும் நேரம் என்று சொல்வார்கள். கல்வி என்ற முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக இருப்பவர்களே மூன்று கோணங்களில் மாறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
Credits:google
4)தினமும் படிக்கவேண்டிய பாடத்தைப் படிப்பு விடுமுறைவரை காத்திருக்க வைப்பது எத்தனை முட்டாள்தனம்! நாளும் மூன்றுவேளை உண்ணவேண்டியதைச் சேர்த்துவைத்துத் தூங்கும்முன் உண்ணமுடியுமா? அப்படி உண்டாலும், உடல் தாங்குமா? உடலில் தங்காமல் போகுமே! அவ்வப்போது அளவோடு உண்டால் ஆயுளும் கூடும். எனவே, தினமும் படிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது; இருக்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு நாளும் வீட்டில் படிப்பதற்கு ஏற்றநேரம் எது என்பதில்தான் ஒரு தெளிவான ஒன்றுபட்ட சிந்தனையில்லை.
Credits:google
5)குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவரும் முன்னரே அன்றைய ஹோம்வொர்க் பற்றிய விவரம் பெற்றோரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்துவிடுகிறது. ‘இன்று உன் நாள் எப்படி இருந்தது? மதிய உணவை முழுவதும் முடித்தாயா? ஜூஸ் குடித்தாயா?’ போன்ற சிறுசிறு விசாரிப்புகள்கூட இன்றி ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான இண்டர்வியூ நடத்துவதுபோல வீட்டுப்பாடம் பற்றிக் கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர். அதுவும் ஒரு குழந்தை உள்ள வீடென்றால் அக்கறை என்ற பெயரில் அதை அக்கரைக்குத் தள்ளிவிடுகின்றனர்.
உங்களுக்கு எந்நேரமும் சரியெனத் தோன்றினால், இரவில் 10 மணி வரை நன்றாகப் படித்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். காலையிலும் 5 மணிக்கு எழுந்து, படித்தவற்றை நினைவுகூர்ந்தால் அல்லது மீதியிருப்பதைப் படித்தால், அது வகுப்பில் ஆசிரியர் கேட்கும்போது உதவுவதோடு அடுத்த பாடத்திலும் தொடர்ந்து பயணிக்கக் கை கொடுக்கும். மூளைக்கும் ஓய்வு மிக அவசியம். தேர்வாக இருந்தாலும் உங்கள் மூளையை ஓய்வின்றி பட்டினி போடாதீர்கள்.

படிப்பது கஷ்டமாக இருக்கிறதா? இலகுவாக படிக்க சில டிப்ஸ்

படிப்பது கஷ்டமாக இருக்கிறதா? இலகுவாக படிக்க சில டிப்ஸ்

1)நேர அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள் அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள்.
2)படிக்கும் இடத்தில் சுவரிலோ அல்லது மேசை மீதோ இன்னின்ன பாடங்களை இதற்குள் படித்து முடிக்க வேண்டும் என்று அட்டவணை இட்டு, வாரம் ஒரு முறை அதைத் தேவைக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்து, இந்த பாடத்தை இந்த மணிக்குள் படித்து முடிக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

3)அதன்படி திட்டமிட்டவாறு உரிய காலத்தில் படித்து முடிக்க வேண்டும் என்று மனத்திற்குள் தீர்மானம் செய்துவிட்டால் விரைவில் பாடங்கள் நினைவில் நிற்கும். அத்தோடு தூங்கும் முன் தன்னை தனே சுய ஆய்வு செய்துகொள்ளுங்கள்.
4)தினமும் காலை யோகா செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். இது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். ஒவ்வொரு முறையும் படிக்கத் தொடங்குமுன் மனதை சமநிலைக்குக் கொண்டு வரும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

5)கண்களை மூடிக்கொண்டு ஓரிரு மணித்துளி விட்டுப் பிறகு படிக்கத் தொடங்கினால் சாதாரணமாக 1 மணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதை 15 மணித்துளிகளில் படித்து முடித்துவிட முடியும். இந்த ஓரிரு மணித்துளி பயிற்சி மூளைக்கு அடியில் உள்ள ஐபோதலாமஸ் சுரப்பியைத் தூண்டுவதால் பயன் ஏற்படுகிறது.
6)பாடத்தை குறிப்பெடுத்து படித்தால், ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும். ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும். படித்து முடித்த பின், எழுதிப் பாருங்கள். அது நீண்ட நாள் ஞாபகத்தில் பதிய வைக்கும். பெரிய வினாவை படித்தவுடனோ, எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம்.
7)அது, மூளையை சோர்வடையாமல் காக்கும். தொடர்ச்சியாகப் பல மணி நேரம் படிப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மணித்துளி கண்களை மூடி கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கலாம்.

கர்ப்பிணிகள் ஏன் கட்டாயம் குங்குமப்பூவை உட்கொள்ள வேண்டும் தெரியுமா..

கர்ப்பிணிகள் ஏன் கட்டாயம் குங்குமப்பூவை உட்கொள்ள வேண்டும் தெரியுமா..


கர்ப்ப காலத்தில், கருவுற்றிருக்கும் பெண்களின் தாய்மார்கள் அனைவரும் தனது மகளின் வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதி, பல்வேறு அறிவுரைகளை கூறுவதுண்டு.
அவற்றில் ஒன்று தான் குங்குமப்பூ. ஆசிய நாடுகளில் கர்பிணித் தாய்மார்கள் குங்குமப்பூவை உண்பது தற்போது வழக்கமாகியுள்ளது. எனினும், மேலைத்தேய நாடுகளில் இது குறைவு தான்.

01. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்
குங்குமப்பூவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. எனவே கர்ப்பிணிகள் இதை உண்பதால் அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் குறையும்.

02. குமட்டலை தடுக்கும்
கர்ப்ப காலத்தில் பொதுவாக அனைத்து தாய்மார்களுக்கும் உள்ள பிரச்சினை தான் இந்த குமட்டல். குங்குமப்பூவானது இந்த குமட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.
03. உணவு நல்ல முறையில் சமிபாடடையும்
குங்குமப்பூவானது இரத்த ஓட்டத்தை சீர் செய்து உணவு சமிபாடடைதலை இலகுவாக்கின்றது.
04. இதயத்தை பாதுகாக்கின்றது
குங்குமப்பூவில் உள்ள பொட்டாசியம், அன்டிஒக்ஸிடன்ஸ், மற்றும் குரோசெட்டின் ஆகியன கொலஸ்ரோல் அளவை பாதுகாத்து குழந்தையின் இதயத்தை பாதுகாக்கின்றது.

ஒரே வாரத்தில் கருவளையத்தை எப்படி விரட்டியடிப்பது என தெரியுமா...

ஒரே வாரத்தில் கருவளையத்தை எப்படி விரட்டியடிப்பது என தெரியுமா...


கண்களைச் சுற்றி கருவளையம் வந்து விட்டாலே முகத்தின் அழகு கெட்டு விடும். வேலைப்பழு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹோர்மோன் மாற்றங்கள் என்பன இந்த கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக அமைகிறது.
01. இரவு தூங்க செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயுடன் பால் கலந்து கண்களின் அடிப்பரப்பில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும்.

02. இரவு தூங்க செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெய்யை கண்களுக்கு அடியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவது நல்ல பலனை கொடுக்கும்.

03. ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்தும் தேய்த்து வரலாம். இரண்டு எண்ணெய்களையும் கண்களுக்கு அடிப்பரப்பில் தடவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். காலையில் கழுவுங்கள். இதேபோல் பாதாம் எண்ணெயுடன், ஆமணக்கு எண்ணெயை சேர்த்தும் பயன்படுத்தலாம்.
 

காலஞ்சென்ற கலைஞர் உரைத்த முத்தான வாழ்க்கைக்கு வித்தாகும் பொன்மொழிகள்..!


காலஞ்சென்ற கலைஞர் உரைத்த
முத்தான வாழ்க்கைக்கு வித்தாகும் பொன்மொழிகள்..!

1 "தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை."

2 "உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்."

3 "தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது."

4 "குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்."

5 "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது"

6  "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்."

7 "வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?"

8 "மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்."

9 "உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்."

10 "இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!"

11 "பதவி என்பது முள்கிரீடம் போன்றது!"

12 "அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை."

13 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.

14 "அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?"

15 "ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் கணக்கிடத் தெரிந்துகொள்ளலாம்."

16 "தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை."

17 "ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது."

18 "அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது."

19 "அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்."

20 "தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்."

21 "தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, உச்சி போய் சேரும் போது தான் அதிக அச்சம் தோன்றுகிறது.

22 "பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சி இல்லாமலேயே தமக்கு தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்."

23 "சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்."

24 "கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு."

25 "துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு என்றும் தூக்கமில்லை..."

26 நான், எனது என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது..
நாம், நமது என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்.

27 நேற்று என்பது என்றும்
நடந்ததை நினைவு கூறவே..
இன்று என்பது எதையும்
நாளை என்றில்லாமல் கடமையை உடனே செய்யவே.!

28 உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த தமிழ் மண்ணுக்குரிய பண்பாடு.

29 எதிரிகளை அழிப்பதைவிட அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் நாச எண்ணங்களை தலை குனியச்  செய்வதே நிரந்தர வெற்றி..!

30 புகழும் பாராட்டும் கிடைக்கும் போது குட்டையன வாயிலை
கடப்பது போல குனிந்து செல்ல வேண்டும்..! இல்லையெனில் நெற்றியடி நிச்சயம்..!!

31 வீரன் சாவதே இல்லை.
கோழை வாழ்வதே இல்லை

32 விதவை என்ற  வடமொழி சொல்லை
தமிழில் கைம்பெண் என்று எழுதிப்பார் இரண்டு பொட்டு வைக்கலாம். தமிழ் வஞ்சிக்காது. வாழவைக்கும்

*ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'* *என்று தனது கல்லறையில் எழுத வேண்டும் என்பது கலைஞரின் கடைசி விருப்பம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கனவு பலன்கள்


கனவு பலன்கள் !

♥நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும் :

♥அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.

♥மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

♥அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

♥அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

♥ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.

♥அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

♥அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.

♥அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.

♥அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

♥அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

♥ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

♥ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.

♥ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.

♥ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

♥ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் நீங்கும்.

♥இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.

♥இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

♥இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

♥இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.

♥இந்திர தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும்.

♥ ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களில் பகைமையை உருவாக்கும்.

♥கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.

♥உடுக்கையை காண்பது போல் கனவு கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

♥உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

♥உத்தியானம் (தோட்டம்) வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.

♥உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

♥உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.

♥உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.

♥ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.

♥ஊன்(இறைச்சி) விற்பதைக் கனவில் கண்டால் எதிர்பாராத தன வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.

♥எருது மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.

♥எருது சீறுவது போல் கனவு கண்டால் அதிகாரம் குறையும்.

♥எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.

♥எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது.

♥ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥ஒட்டகத்தைக் கனவில் கண்டால் பயணங்களில் பல்வேறு இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.

♥ஓநாய் விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த உறவினர்களால் பகைமை ஏற்படுவதை குறிக்கிறது.

♥கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.

♥கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥காசி நகரத்தைக் கனவில் கண்டால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

♥காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.

♥கிழங்குகளை கனவில் கண்டால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கீரியை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்

♥பூக்கள் நிறைந்த கலத்தை கனவில் கண்டால் வருமானம் பெருகும் பொருளாதார வளம் ஏற்படும்.

♥பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.

♥பெண் தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥பெருச்சாளியை கனவில் கண்டால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥பேன் தலையில் இருப்பது போல் கனவு கண்டால் ஏமாற்றம் உண்டாகும்.

♥பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.

♥ பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.

♥பொன்(தங்கம்) கனவில் வந்தால் மங்களம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ மயானத்தை கனவில் கண்டால் காரியத் தடங்கல் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

♥மரத்தை பதமையான (மென்மையான) நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதைக் குறிக்கிறது.

♥மலர்களை கனவில் கண்டால் சொத்து அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ மாமிசம் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥மிருதங்க ஒலியை கேட்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

♥மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ மீன்களை கனவில் காணுதல் நன்மை பயக்கும்.

♥மூடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥முதலையை கனவில் கண்டால் அறிவாற்றல் பெருகும் என்பதைக் குறிக்கிறது.

♥ முத்தை கனவில் கண்டால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥முயலை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்பட்டு இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥மேட்டில் இருப்பது போல் கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும்.

♥மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும்.

♥யாகத்தை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥யானையை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.

♥ரத்தத்தை கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

♥வண்டியை கனவில் கண்டால் இன்பம் மற்றும் துன்பம் சரிபாதி அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

♥வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
♥வலிமைமிக்கவர்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

♥வாத்தை கனவில் கண்டால் கடன் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

♥விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

♥விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

♥வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.

♥விளக்கு எரிவதைப் போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥விளை நிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥வீணை ஓசையை கேட்பது போல் கனவு வந்தால் சுப செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

♥வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.