செவ்வாய், 23 ஜூலை, 2019

டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்வி சிந்தனைகள் !!


கறுப்பர்.. வெள்ளையர்.. இந்தியர்.. நிறவெறிக்கு பதிலடி கொடுத்த ஆசிரியர்..!

டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்வி சிந்தனைகள் !!

👉அந்தந்த பகுதிகளின் தாய்மொழியிலேயே பல்கலைக்கழக கல்வியை வழங்குவது தான் சிறந்தது.

👉ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவு தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.

👉அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும்.

👉கல்வியானது மனிதனை நெறிமுறைப்படுத்துவதோடு சுதந்திர சிந்தனையாளனாக்க வேண்டும்.

👉பல்கலைக்கழகங்கள், மனித நேயத்தையும் பொறையுடைமையையும், கருத்துப்புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும்.

👉ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் - அறிவியல் வல்லுநர்கள் - கவிஞர்கள் - கலைஞர்கள் - புதியன கண்டுபிடிப்பவர்கள் - மறைந்துள்ளவற்றை தேடி அறிபவர்கள் - ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.

👉பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டும்.

வெள்ளைத்தோல் கறுப்புத்தோல் விளக்கம் :

👉நிறவெறி பிரச்சனைகள் உலகில் தலைவிரித்தாடிய காலத்தில் ராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்ந்ததால் அதுபற்றி அவர் ஆழமான ஒரு விளக்கத்தை கொடுத்தார்.

👉கடவுள் முதன்முதலாக ரொட்டி சுடுகிறார். அனுபவமில்லாமல் கருக விட்டு எடுத்தார். அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பர் இனம்.

👉அடுத்த ரொட்டியை கருகவிடாமல் எடுத்துவிட வேண்டுமே என்ற அவசரத்தில் சரியாக வேகாமலே எடுத்துவிட்டார். அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் வெள்ளையர்கள் இனம்.

👉இந்த இரண்டு அனுபவத்துக்குப் பிறகு, எச்சரிக்கையாக சரியான பதத்தில் மூன்றாவது ரொட்டியை சுட்டு எடுத்தார். அவர்கள்தான் இந்தியர்கள் என்றார்.

👉நிறவெறியில் தீவிரம் காட்டியவர்களும் புன்முறுவல் பூக்கும் அளவுக்கு அதை நீர்த்துப்போக செய்யும் இந்த விளக்கம் உலக அளவில் பிரபலம் அடைந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக