ஆடி மாதம் ஆகாதுன்னு சொல்றாங்க... இது உண்மை தானா?
ஆடி மாதம் ஆகாதது ஏன்?
🌟 ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
🌟 ஆடி மாதம் புதுமண தம்பதிகள் இணையும் போது, கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கலாம். சித்திரை அக்னி நட்சத்திரம் என்னும் கடுமையான வெப்பம் நிறைந்த மாதம். இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் எளிதில் சின்னம்மை போன்ற வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும். உடல் நலிவடையும்.
🌟 குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்படும் என்பதால்தான் 'சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்" என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமாக கொண்டுதான் ஆடிமாதத்தில் தம்பதியர் சேருவது நல்லதல்ல என்கின்றனர்.
🌟 இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. எனவே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்துவைக்கின்றனர்.
🌟 நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சாஸ்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் நிறைய விளக்கங்கள் உண்டு. அதனால் பெரியோர்கள் கூறும் அறிவுரையை கேட்டு நாம் வளமான வாழ்க்கையை வாழ்வோம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக