புதன், 10 ஜூலை, 2019

அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது.


அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது...

*நான்* காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
*நீ* நெருப்புப் புகையோடு
போராடிக் கொண்டிருக்கிறாய்.

*நான்* பல் துலக்குகிறேன்
*நீ* பாத்திரங்களை
புதுப்பிக்கிறாய்.

*நான்* செய்தித்தாளில்
செய்திகளை சேகரிக்கிறேன்.
*நீ* வீட்டில் குப்பைகளை
பெருக்குகிறாய்.

*நான்* உடலை சுத்தம் செய்கிறேன்.
*நீ* ஆடைகளின் அழுக்குகளை
பிரித்துக் கொண்டிருக்கிறாய்.

*நான்* பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.
*நீ* பாத்திரங்களை
நீரால் நிரப்புகிறாய்.

*நான்* அலுவலகம் கிளம்புகிறேன்.
*நீ* பிள்ளைகளை
சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய்.

*நான்* இரவு வீடு திரும்புகிறேன்.
*நீ* இன்னும் திரும்பவில்லை
சமையலறையிலிருந்து.
*நான்* தூங்கச்செல்கிறேன்.
*நீ* கதவின் தாழ்ப்பாள்களையும்
எரியும் மின்விளக்குகளையும்
பிள்ளைகளின் போர்வைகளையும்
சரிபார்த்து விட்டே
படுக்கையில் விழுகிறாய்.

ஒவ்வொரு ஞாயிறுகளும்
ஒவ்வொரு பண்டிகைகளும்
எங்களுக்கு ஓய்வு நாட்கள்
👉 *உனக்கு?*

உறவு வீட்டு விழாக்களில்
எங்களிடத்தில் *நீ!*

கல்விக்கூடங்களின்
கேள்விகளுக்கான பதில் *நீ!*

சோக நிகழ்வுகளிலும்
கண்ணீர் சிந்திய படி *நீ!*

எங்களின் பிரதிநிதியாக
கோவில்களிலும் *நீ!*

என் வாழ்க்கைத்தோழியே!
இப்போதெல்லாம்
" நான் வேலைச்செய்கிறேன்''
என்று சொல்லவே
தயக்கமாக இருக்கிறது
கழிந்தப் பொழுதின்
உன் ஒற்றைப் பதிலால்..

புள்ளிவிபரம் சேகரிக்க வந்த அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்
" வேலைப் பார்க்கிறீர்களாமா?"

உன் பதில்..

"இல்லங்க..*
*நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்...".

மனைவியை நேசிப்போம், ஒரு  விதத்தில் அவளும் நம் தாய் தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக