வெள்ளி, 12 ஜூலை, 2019

மகிழ்ச்சியாக வாழ!


மகிழ்ச்சியாக வாழ!

வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ள வேண்டும்.
மனம் சக்தி பெறும்.
புதிய தெம்போடு செயல்படலாம்.

1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.

2. நல்ல வேளை. இத்தோடு போச்சு.

3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல.

5. பணம்தானே போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.

6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

8. கஷ்டம் தான் … ஆனா முடியும்.

9. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?


11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

12. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா

13. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

15. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.

19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோற்றால் அது என்ன பெரிய தப்பா?


21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.

வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....
வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.

உற்சாகம் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சி நமதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக